மனக்கொந்தளிப்பு அதிகம் இருக்க வேண்டும். அல்லது, சிறிது சிறிதாக நிறைய தவறுகள் செய்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாவிட்டால் எதிலிருந்தாவது தப்பிப்பதற்கு மனம் தொடர்ந்து குறுக்கு வழிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். ஞானத்தேடல் என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் ஒரு தனி மனிதன் சன்னியாசத்தை விரும்புவதற்கு இந்த மூன்று காரணங்கள்தாம் இருக்க முடியும் என்பது என் அபிப்பிராயம். ஒரு காலக்கட்டத்தில் என்னிடம் இந்த...