Tagதமிழ்

எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை

இன்றைய பதிப்புத் துறையில் நான் காணும் மிகப் பெரிய பிரச்னை ப்ரூஃப் ரீடிங். அந்தப் பணி, அதன் மேன்மையை முற்றிலும் இழந்து, சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆண்டுக்குப் பலநூறு தமிழ் நூல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மக்களும் வாங்கிப் படிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சில புத்தகங்கள் விருது பெருகின்றன. சில விற்பனையாகின்றன. நூலக ஆணை இதர...

மெட்ராஸ் பேப்பர்

தொலைக்காட்சிக்கு எழுதுவதை நிறுத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்நாள்களில் நான் என்ன செய்கிறேன் என்று கேட்காத நண்பர்களே கிடையாது. எதையாவது செய்துகொண்டிருப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோருக்கும் இருந்தது. அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தாலும் அது உருத் திரண்டு ஒரு வடிவம் கொண்டு வெளிப்பட இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது. நண்பர்களே, உங்கள் வாழ்த்தோடு ஒரு புதிய பத்திரிகை தொடங்குகிறேன்...

ஆத்தா உன் கோயிலிலே!

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் என்று இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது. கன்னித்தமிழுக்குக் கல்யாணம் செய்து வைத்து அன்னைத் தமிழாக்கி, அவள் பல  பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டு, கிட்டத்தட்ட ரிடையர் ஆகி வீட்டில் தொலைக்காட்சி...

தமிழே, தப்பிச்சுக்கோ!

நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன். அவரது தொடக்ககாலப் பாடல்கள் முதல் நேற்றைக்கு வெளியானதுவரை அநேகமாக எதையும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன். தியானமாகக் கொள்ளத்தக்க இசை வடிவங்களை வழங்கிய சில இசை வல்லுநர்களுள் அவர் ஒருவர். சுயம்பு, குழம்பு என்றெல்லாம் என்னால் சிலிர்க்கமுடியாது. கண்டிப்பாக மூழ்கி எடுக்கவேண்டிய முத்தைத்தான் அவர் எடுத்திருக்கிறார். கடும் பயிற்சியும் சிந்தனை ஒழுக்கமும்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter