குசேலன்

இந்தப் படத்தில் ஒரே ஒரு ஷாட்டை நான் மிகவும் ரசித்தேன். சலூன் வைத்திருக்கும் ஹீரோவான பசுபதி, கட்டிங் – ஷேவிங்குக்கு அதிரடி விலைக்குறைப்பு செய்து ஒரு போர்ட் எழுதி வைப்பார்.

கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும்.

துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும் அதைத்தான் செய்திருக்கிறார்.

* நான் ரசித்த நாகராஜனின் விமரிசனம் இங்கே.

Share

21 comments

  • குத்துங்க எஜமான் குத்துங்க. இந்த சினிமாக்காரங்களே இப்படித்தான். எதிர்பார்க்குறப்போ அநியாயத்துக்கு ஏமாத்திடுவாங்க! 🙂

  • Excellent. இதைவிட ரத்தினசுருக்கமாக விமரிசிக்கவே முடியாது! இன்று நைட்ஷோவுக்கு புக் செய்திருக்கிறேன். பார்க்கத்தான் வேண்டுமா என்று இப்போது தோன்றுகின்றது!

  • பாரா,

    என்னயா விமர்சனம் இது ? படம் பார்த்தாதான் புரியும்னா.. கஷ்டம்தான்.

  • என் மரமண்டைக்கு (அதாவது இலக்கியச் செறிவில்லாததற்கு) புரியும்படி விமர்சனம் எழுதக் கூடாதா ? 🙂 இருந்தாலும், நன்றி !

  • தெகிரியமா கமெண்ட்ஸ் திறந்துட்டீங்க?

    அக்குள் ஷேவிங்ன்னா, கச்சிதமா நேர்த்தியாய் படமெடுத்திருக்கிறார்ன்னு சொன்றீங்களோ? 🙂

  • //கனகவேல் காக்க வர்ற நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்கிறார்கள் //

    நானே எழுதினாலும் ஒரு திராபையை திராபை என்று சொல்வதில் எனக்குப் பிரச்னை ஏதுமில்லை.

  • ராகவன அண்ணா: இன்னும் படம் பார்க்கவில்லை.. நான் இருப்பது தைவானில். இங்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாது.. ஆனாலும் அக்குள் சவரத்தை படித்தவுடன் ச்சே ச்சே என்றாகிவிட்டது.. கர்நாடக பல்டி பற்றி தாங்கள் எளுதுவிர்களா? சரி.. ஆட்டோ கீட்டோ வீட்டுக்கு வந்துடும்ன்னு பயப்படவே மாட்டிங்களா? விஜய்யே குமுதம் ஆபீஸ்க்கு ஆட்டோ அனுப்பும் போது அவருடய தலைவர் கிழக்குக்கு அனுப்பி விடப்போறார்..

    அக்கறையுடன் அருமைத் தம்பி,
    பிரபு.

  • //கனகவேல் காக்க வர்ற நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்கிறார்கள் //

    டைட்டிலே சும்மா நச்சுன்னு இருக்கு. படத்தில் கதை, பிரம்மாண்டம் இத்யாதிகள் எப்படி இருக்குமோ தெரியாது. வசனம் மட்டும் சும்மா கில்லி மாதிரி இருக்கும்ணு தெரியும் 🙂

  • குசேலன் பார்த்துவிட்டேன். உங்கள் விமர்சனத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. இறுதிப்பகுதி நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.அதை நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். இண்டர்வல் வரை மிகவும் போரடித்தாலும் இரண்டாம் பகுதியில் நன்றாகவே எடுத்திருக்கிறார்கள்.ரஜினி – பசுபதி இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் இல்லாத ரஜினி படம் மக்களுக்குப் புதுசுதானே? மேலும் “ஹீரோ பசுபதி” என்று நீங்கள் சொல்லியிருப்பதும் ஒரு உள்நோக்கத்துடன் தான்” என்று நினைக்கிறேன். ஒரு வேளை உங்களைப்போன்ற அறிவு ஜீவுகளுக்குப் பிடிக்காதோ என்னவோ.மொத்தத்தில் ஒதுக்கித்தள்ளக்கூடிய படம் இல்லை என்றே எனக்குத் தோன்றியது. சில குறைகள் இருந்தாலும் குசேலன் ஒரு நல்ல திரைப்படமே.

  • இதுதாண்டா பாரா!

    ஜோரா இருக்கு பாரா. என் அருகில் இருந்த ஒரு கும்பலே விழுந்து விழுந்து சிரித்தது.

    நாகூர் ரூமி

  • //ஒரு திரைப்படத்தினை இப்படி பொத்தாம் பொதுவாக குப்பை, மொக்கை, அக்குள் முடி என்று குதறுவது நியாயமல்ல.//

    அய்யய்யோ… ரெண்டே வரியில தன்னோட கருத்தை அண்ணன் உண்மைத்தமிழன் பதிவுசெஞ்சிட்டாரா?

    பா.ரா சார், நல்லாத் தேடி பாருங்க!

    இது அவர் எழுதின கருத்துக் கட்டுரைக்கு தலைப்பா இருக்கும்.
    கட்டுரை எங்கே? 🙂

    பி.கு : இது சும்மா காமெடிக்குதான். அண்ணன் உண்மைத் தமிழன் இதுக்கெல்லாம் கோச்சிக்க மாட்டாரு.

  • //ஒரு திரைப்படத்தினை இப்படி பொத்தாம் பொதுவாக குப்பை, மொக்கை, அக்குள் முடி என்று குதறுவது நியாயமல்ல.//

    அதானே?

    குப்பை, மொக்கை, அக்குள் முடி என்று ஒரு அய்ம்பது அல்லது அறுபது பக்கத்தில் எழுதி பார்ப்பவன் தாவூ தீர்ந்து தெறித்து ஓடுமாறு செய்வது தானே நல்ல பண்பாடு?

    பாராவுக்கு உண்மைத் தமிழனின் பண்பாடு தெரியவில்லை என்பதற்காக எனது கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

  • லக்கி லுக்கின் ஜால்ரா சப்தம் பா.ரா. பக்கங்களில் எக்கச்சக்கமாக ஒலிக்கிறதே, ஏன்?

    அதுவும் கனகவேல் காக்க வசனம் கில்லி மாதிரி இருக்கும் என்று சர்டிபிகேட் வேறு!

  • என்ன சொல்ல வருகிறீர்கள் பாரா?

    //
    கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும்.

    துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும் அதைத்தான் செய்திருக்கிறார்.
    //
    படம் முழுவதும் வாசு அக்குள் சேவிங் செய்யவில்லை என்கிறீர்களா?! அதைத் தான் எதிர்பார்த்தீர்களா?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி