2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத்...
எனக்கு இங்கே வயது எட்டு
சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...
ஒரு மாணவனின் புத்தகம்
* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். – யாமாசான் * உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. – அகிரா குரோசாவா. கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்...
முதுமையின் மற்றொரு நோய்
ஆசை யாரை விட்டது? கலைஞருக்கு நோபல் பரிசு வேண்டியிருக்கிறது. பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் இதற்காகப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு. குழுவில் கலைஞரின் பேத்தி கயல்விழியும் ஒருவர். மிகச் சமீபத்தில் மேடைக்கு வந்தவர் இந்தப் பேத்தி. தவிர சில கல்வியாளர்கள், கவிஞர்கள், ஒரு கவிப்பேரரசர். இந்தப் பன்னிரண்டு பேரும் கலைஞரின் எழுத்தோவியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு...
எனக்கொரு விருது
இதைவிட சந்தோஷமாக எப்போதும் நான் உணர்ந்ததில்லை. முதல் முதலாக என்னுடைய மாணவன் ஒருவனின் புத்தகத்துக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. ஆர். முத்துக்குமார் எழுதி கிழக்கு கடந்த ஆண்டு வெளியிட்ட ‘அன்புள்ள ஜீவா’ என்கிற ப. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புச் செம்மல் மெய்யப்பன் நினைவு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது மணிவாசகர் பதிப்பகம் ஆண்டுதோறும் வழங்கும் விருது. கே.ஜி. ராதாமணாளன்...
பிறந்த ஊர்
சோமங்கலம் என்கிற ஊரைப் பற்றி சிறு வயதிலிருந்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை, பார்த்ததில்லை, அதற்கான சந்தர்ப்பங்கள் ஏதும் நேர்ந்ததில்லை. அந்த ஊரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நான் பிறந்தேன் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். சென்னை தாம்பரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிற கிராமம் போன்ற ஊர். பிறந்த ஊர் என்று பெருமிதம் கொள்ள...
மீட்டர் போட்ட ஆட்டோ
விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம். ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன். ‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது. ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப்...
கி.ரா.
சரியாக எட்டு வருடங்கள் ஆகின்றன, நான் அவரைச் சந்தித்து. நேற்று நேர்ந்தது. அதே புன்னகை. அதே அன்பான தோள் தட்டல். அதே நலன் விசாரிப்புப் பாணி. அதே ‘அழகிய’ சென்னைத் தமிழ். நல் ஊழ் மட்டுமே நல்ல ஆசிரியர்களை நமக்குக் கொண்டுவந்தளிக்கும். கி.ரா. என்கிற கி. ராஜேந்திரன் எனக்கு அம்மாதிரி. கார்ட்டூனிஸ்ட் மதியின் ‘அடடே’ புத்தக வெளியீட்டுக்கு அவரை அழைத்திருந்தோம். தம் மகளும் தற்போதைய கல்கி ஆசிரியருமான...