கலைஞர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். சிலர் காசுக்கு மாரடிப்பவர்கள். சிலர் புகழுக்கு மயங்குபவர்கள். பித்தனைப் போல் கலையே நான் என வாழ்பவர்கள் சொற்பம். பொதுவாகக் கலையைக் கடவுளாக நேசிக்கும் பலர் இயல்பிலிருந்து பிரிந்து வாழ்பவர்களாக இருப்தற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பெருங்கலைஞர்கள் பலர் வேறு உலகில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார். பிரபல டச்சு ஓவியக்கலைஞர் Vincent Vam Gogh இம்மாதிரி...
இறவான் – சுரேஷ் பவானி
“பொறாமை! தான் வாழும் காலத்தில் தன்னை விஞ்சும் ஒருவன் வந்துவிடக்கூடாது என்று நினைத்துவிட்டான். நீங்களே சொல்லுங்கள். ஒரு நல்ல கலைஞன் அப்படி நினைப்பானா? கலை என்பது தெய்வம் அல்லவா? கலைஞன் என்பவன் தெய்வத்தின் ஆராதகன் அல்லவா?” கத்தினான் அவன். காகிதங்களை கிழித்தெறிந்தான் அவன். தீயிட்டும் கொளுத்தினான் அவன். பிறகு முகம் கழுவி டீயொன்றும் குடித்தான் அவன். அவன் யாரென்று உங்களுக்குத் தெரியும்...
இறவான் – ஒரு பார்வை [சிவராமன் கணேசன்]
இதை எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை. ஒரு அபாரமான படைப்பை வாசித்துமுடித்தபிறகு உடனே வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு அந்தகாரத்தனிமைதான் இந்த நள்ளிரவில் என்னைச்சூழ்ந்திருக்கிறது. ஆசிரியர் பா.ராகவனின் இறவான் நாவல் ஒரு காவியம். அதற்கு மேல் ஏதேனும் சிறந்த வார்த்தை இருந்தாலும் போட்டுக்கொள்ளுங்கள். நான் உணர்ச்சிவசப்படவில்லை, முகஸ்துதி செய்யவில்லை, இதன் உள்ளடக்கம் சொல்லும் சப்டெக்ஸ்ட் சாதாரணமானதல்ல...