ஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால்...
பொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா
பா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது...
மிக விரைவில்…
நான்கு சந்துகளுக்கு அப்பால்
பொதுவாக நான் புத்தகங்களைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அறிமுகமாக நாலு வரி எழுதினால் அதிகம். அதற்குமேல் சொல்ல என்னிடம் எப்போதும் ஏதும் இருப்பதில்லை. காரணம், வாசிப்பது என்பது என் பிரத்தியேக சந்தோஷம். என் அனுபவம் மற்றவர்களுக்கும் நேரும் என்று சொல்லுவதற்கில்லை. ஆஹாவென மக்கள் வியந்து பாராட்டிய பல புத்தகங்களை நாலு பக்கம் கூட வாசிக்க முடியாமல் கடாசியிருக்கிறேன். அதேபோல, எனக்கு மிகவும் பிடித்த பலவற்றை...
சூர்யா, ஒன்பதாம் வகுப்பு
நேற்று மயிலாடுதுறையில் சூர்யா என்றொரு சிறுவனை சந்தித்தேன். ஒன்பதாம் வகுப்பில் படிக்கிற பையன். ஒபிசிடி காரணமாக பேலியோ டயட் எடுத்து சுமார் 15 கிலோ எடை குறைத்தவன்.
விஷயம் அதுவல்ல.
IS – புதிய புத்தகம்
அல் காயிதா தொடங்கி மத்தியக் கிழக்கின் அனைத்துப் போராளி இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் எழுதி முடித்து, இனி அங்கே வேறு யாரும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில் ஐஎஸ் (என்று இன்று அழைக்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ்) பிறந்தது. இராக்கில் ஐஎஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய 2003ம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வப்போது சிறு குறிப்புகளாக...
எனது புத்தகங்கள் – ஓர் அறிவிப்பு
கடையில் இல்லை, ஆன்லைனில் இல்லை, மின் நூலாக இல்லை, பதிப்பில் உள்ளதா, உங்களிடம் பிரதி கிடைக்குமா – என் புத்தகங்களைக் குறித்து சில காலமாகத் தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டு வருகிற இவ்வினாக்களுக்கு இங்கே விடை. இனி என்னுடைய அனைத்து நூல்களும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியிடப்படும். எப்போதும் அச்சில் இருக்கும். மிக விரைவில் மின் நூல்களாகவும் கிட்டும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஜனவரி 2017...
நன்றி
ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் வாரமலரில் ஒரு தொடர்கதை எழுதினேன். அது ஒரு க்ரைம் த்ரில்லர். அதன்பிறகு இப்போதுதான் மறு நுழைவு. இந்த முறையும் க்ரைம் த்ரில்லர்தான். ஆனாலும் இது கதையல்ல. கதையைவிட சுவாரசியம் கொண்ட அரசியல்.