‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’இற்குள் வெறித்தனமாக வாழத் துவங்கியிருக்கிறேன். ‘சொல்லுங்க பாய்’ எனும் அவருடைய இயல்பான உரையாடலை எழுத்திலும் வைத்து, ‘வூடு’ கட்டி அடித்துச் செல்லும் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நானும் கொஞ்சமாவது வாழ்ந்திருக்கிறேன். அவர் எழுத்து ‘எனது’ சென்னைக்கு உள்ளே சில நிமிடங்கள் சென்று உட்கார்ந்து மெதுவாக சிலவற்றை அசைபோட வைக்கிறது. உங்களுக்கு சென்னையில்...
அழகும் பொருத்தமும் (எஸ். கார்த்திகேயன்)
“ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்” என்றொரு தொடரை எழுத்தாளர் Pa Raghavan அவரது டாட் காமில் எழுதி வருகிறார். தினம் ஒன்று எழுதுகிறார் போல – இன்று 7 வது அத்தியாயம். ஃபேஸ்புக் ஸ்கிரால் செய்கையில் அவர் பக்கத்தில் 6 வது பாகத்தின் லிங்க் பார்த்து உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து 6 வதை அடையும்போது 2 மணியைத் தாண்டியிருந்தது. தேதி பார்த்து “பேஜ் ரிஃப்ரெஷ்”...