05.01.2009 – திங்கள் [அதாவது நாளை] மாலை 6 மணிக்கு மாலனின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறோம். நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மாலனின் ‘சொல்லாத சொல்’ கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இந்நூலைக் கொள்ளலாம். தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பெரும்பாலும் அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த...
திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!
ஒரு காலத்தில் நூறு. பிறகு ஐம்பது சேர்ந்தது. மேலும்கூடி இருநூறானபோது செய்தியில் வந்தது. பிறகு ஸ்கோர் என்னவென்று கேட்காத குறை. இந்த வருடப் பட்டியல் இங்கே இருக்கிறது. பிரம்மாண்டத் தமிழ்ப் படங்களின் பாடல் காட்சிகளில் பின்னணியில் குதிப்போர் வரிசை போல் இவ்வருட புத்தகக் கண்காட்சி வரிசை அமையவிருக்கிறது. சந்தேகமில்லாமல் திருவிழா. கால்வலி நிச்சயம். எத்தனை சுற்றினாலும் ஏதேனுமொரு வரிசையைத் தவற விட்டதுபோல...