ArchiveDecember 2018

இந்த வருடம் என்ன செய்தேன்?

* அச்சுப்புத்தக வாசிப்பு அநேகமாக இல்லாமல் போய்விட்டது. காசு கொடுத்து வாங்கியவற்றுள் பலவற்றை இன்னும் எடுக்கவேயில்லை. ஆனால் நிறைய புத்தகங்களை மின் நூல் வடிவில் படித்து முடித்தேன். இனி புத்தகக் காட்சியில் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இது மின்நூல் வடிவில் வரும் சாத்தியம் உண்டா என்று ஒரு கணம் யோசித்துவிட்டே வாங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். [மின் நூல்கள் வாங்குவதில் நிறையப் பணம் மிச்சம்...

பூனைக்கதை – ஒரு மதிப்புரை [ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி]

பூனை பேசுமா ? அதன் போக்கில் ஒரு நெடுங்கதையை அது சொல்லுமா ?  அதுவும் காலத்தைக் கடந்து அல்லது காலத்தை வென்று ஒரு பூனை இருக்குமா ? அப்படி இருந்தாலும் அது தான் தேர்ந்தெடுக்கும் மக்களோடு உரையாடுமா ?  ஏன் நடக்காது. பேசும் மிருகங்களை நாம் புராணங்களில் பார்க்கிறோம், நீதிக்கதைகள் முழுவதும் அவை வந்துகொண்டேதானே இருக்கிறது. ஆனால் ஒரு நவீன நாவலில் பேசுகின்ற மிருகத்தை இப்போது பல ஆண்டுகளாக நாம்...

பூனைக்கதை குறித்து ‘வாசகசாலை’ கார்த்திகேயன்

காலத்தைக் கடந்து வாழும் ஒரு மாயப் பூனையின் கண்கள் வழியே கலைஞர்களையும் படைப்புகளையும் அவர்களின் சூழலையும் பேசும் ஒரு உலகத்தை, வாசகர்களின் கண்முன்னே விரிவடையச் செய்கிறது இந்த “பூனைக்கதை” நாவல். வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த கலைஞர்களை, அவர்கள் விரும்பும் கலையின் பொருட்டு அவர்கள் வாழ நேர்ந்த சூழலை,பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவிலும் அவர்களை உயிர்ப்போடு...

பூனைக்கதைக்கு வாசகசாலை விருது

பூனைக்கதைக்கு வாசக சாலை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாசகசாலை அமைப்பாளர்களுக்கு நன்றி.
நாளை மாலை யதி அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த இரு விழாக்களிலும் இருப்பேன்.
பூனைக்கதை அறிமுகம் | கிண்டிலில் பூனைக்கதை
 

பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா

யதி நாவலை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறவிருக்கிறது. நாகூர் ரூமி, சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக. பினாக்கிள் வெளியீடுகள் அரங்கில் 20 சதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

யதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு

யதிக்கு ஆர்வமுடன் முன்னுரை எழுதியோர் மொத்தம் 38 பேர். அவர்களுக்கு முதலில் என் நன்றியைச் சொல்லிவிடுகிறேன். ஆயிரம் பக்க அளவுள்ள ஒரு நாவலை வாசித்து, ஆழத் தோய்ந்து, தாம் உணர்ந்ததை வெளிப்படுத்திய அந்த அன்பும் அக்கறையும் எனக்குப் பெரிய விருது. அநேகமாக வேறெந்த எழுத்தாளருக்கும் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே இத்தனை மதிப்புரைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கேட்டு வாங்கியதுதான் என்றாலும் யார் இன்று வேலை...

மாலுமி – முன்னுரை

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல...

யதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]

துறவறம் எனும் சத்திய தடம் தேடிச் சென்ற நாவலுடன் நானும் பயணித்தேன். மறக்க முடியாத அனுபவம் இது. திஜாவின் கும்பகோணம் – காவிரி போல கேளம்பாக்கம் கோவளம் கடற்கரை மற்றும் திருவிடந்தை பெருமாள் இந்நாவலெங்கும் வியாபிக்கிறார்கள். அந்த விவரிப்பு தரும் சிலிர்ப்பே என்னை ஜீவத் தடத்தைத் தேடிச் செல்லுவதை உறுதிப்படுத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சிறிய கடலோர கிராமத்தில் கிளம்பி, கேரளத்தில்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி