1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம். சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப் படைப்புகளல்ல என்று பலபேர்...
ம்ஹும்!
கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்’ என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது. முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன், யு.ஆர். அனந்த மூர்த்தி...
காது, காதல், கடவுள்
எம்.வி. வெங்கட்ராம், தமது கடைசிக் காலத்தில் ‘காதுகள்’ என்று ஒரு நாவல் எழுதினார். ஒருவனுக்கு திடீரென்று காதுக்குள் வினோதமான சத்தங்கள் கேட்கும். சத்தம் இரைச்சலாகும். இரைச்சல் சமயத்தில் இசையாகவும், வேறு சமயத்தில் பயங்கரமான பிசாசுக்குரலாகவும் கூட ஒலிக்கும். வெங்கட்ராம், தம் காதுக்குள் கேட்ட குரலைத்தான் அந்நாவலில் எழுத்துவடிவில் பதிவு செய்து வைத்ததாகச் சொன்னார். காதுகள் நாவல் வெளியானபோது...