Tagகதை

வாடகைப் பை (கதை)

கருப்பையை வாடகைக்கு விட்டதற்குப் பணம் கிடைத்தது. ஓராண்டுக் காலம் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உண்ண முடிந்தது. அவ்வப்போது விரும்பிய எளிய ஆடம்பரங்களையும் அனுபவிக்க முடிந்தது. பெற்றுத் தரப் பணம் கொடுத்துவிட்டு, அடுத்த வருடம் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போன புருஷன் பெண்டாட்டி அமெரிக்கர்கள். அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. zoom callல்...

நூறு சீன்

அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும். இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான்...

வேடிக்கை பார்த்தவர்கள் (கதை)

சி ப்ளாக் நான்காவது தளத்தில் வசிக்கும் சொக்கநாத முதலியார் லிஃப்ட் ஏற வரும்போது குரங்குகளைப் பார்த்தார். ஒன்று மிகப் பெரிதாக, புஷ்டியாக இருந்தது. இன்னொன்று குட்டிக் குரங்கு. இரண்டும் லிஃப்ட் அருகே அமர்ந்திருந்தன. சொக்கநாத முதலியாரைப் பார்த்ததும் ‘குர்ர்..’ என்றது பெரியது. அவர் பயந்துவிட்டார். அலறிக்கொண்டு பின்னால் வந்து, ‘யாராவது வாங்க. உடனே வாங்க’ என்று சத்தம் போடவும் கதவு...

பேயைப் பெற்றவள் (கதை)

ஒரு ஊரில் ஒரு பெண் பேய் இருந்தது. அது இன்னும் இறக்காத ஒரு பையனைக் காதலித்தது. எப்படியாவது அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, இறந்த தன் தந்தைப் பேயிடம் சொல்லி இன்னும் இறக்காத தாயைப் போய் வரன் பேசச் சொல்லிக் கேட்டது. தந்தைப் பேய் தன் பழைய மனைவியின் கனவில் சென்று விவரத்தைச் சொல்லி, ‘நம் ஒரே மகளின் ஆசையை அன்றே நிறைவேற்றி வைத்திருந்தால் அவள் பேயாகியிருக்கவே மாட்டாள்; இப்போதாவது அவள்...

நடந்தது (கதை)

தவறு நடந்துவிட்டது என்று நினைக்கத் தோன்றவில்லை. விரும்பிச் செய்த ஒன்று எப்படித் தவறாகும்? ஆனால் வீட்டில் எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஆறுமுகம் நல்லவன். ‘கட்ன புடவையோட வா. நான் இருக்கேன் ஒனக்கு’ என்றுதான் நேற்றுக்கூடச் சொன்னான். ஆனால் தன் வீடு அவ்வளவு எளிதாக இதை ஏற்காது என்று நினைத்தாள். அம்மா அழுவாள். அப்பா கையில் கிடைப்பதைத் தூக்கிப் போட்டு உடைப்பார். இழுத்துத் தள்ளி...

கனவுகளின் பலன் (கதை)

ஒரு ஊரில் அப்துல் கலாம் என்றொரு பின்னாள் விஞ்ஞானி படித்துக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஒரு மலை இருந்தது. அது பச்சை மலை எனப்பட்டது. பச்சை மலையின் உச்சியில் இரவு நேரத்தில் தோன்றும் நிலாவைக் காட்டி, “ஒரு நாள் அங்கே நாம் குடி போக முடியும்” என்று அப்துல் கலாம் சொன்னார். அதெப்படி அவ்வளவு உயரம் போக முடியும் என்று ஊர் மக்கள் சந்தேகப்பட்டுக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், “ முடியும், உச்சத்தைக் கனவில்...

வாழும் கலை (சிறுகதை)

எப்படியும் வேலை போய்விடும் என்று எதிர்பார்த்தான். கொத்தாக இருபது இருபத்தைந்து பேரைத் தூக்கப் போகிறார்கள் என்று தகவல் பரவ ஆரம்பித்திருந்தது. நிர்வாகம் கூப்பிட்டுச் சொல்வதற்கு முன்னால் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. இன்னோர் இடத்துக்குப் போய் உட்காராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இடைப்பட்ட நாள்கள் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். கையிருப்பு அதிகமில்லை. செலவே செய்ய முடியாது...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter