முன்பெல்லாம் நாளிதழ்களில் என்ன வெளியாகியிருந்தாலும், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் வழக்கம் உண்டு. இதே போலத் தான் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் எதையும் மறு வினா இன்றி நம்பக்கூடிய ஒரு பெரும் கூட்டம் இருந்தது. சினிமா செய்திகள், வதந்திகளைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையில் வெளியானாலுமே அது சரிதான் என்று நினைப்பார்கள். சிறிது படித்தவர்கள்...
இந்த வருடம் என்ன செய்தேன்?
கிருமி களவாடிய வருடம் என்றாலும் தனிப்பட்ட முறையில் என்னால் எவ்வளவு செய்ய முடியும் என்று எனக்கே நிரூபித்த வருடம் என்பதால் 2020ஐ நான் மறக்கவே மாட்டேன். வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு சில ஏமாற்றுக்காரர்கள், சில நம்பிக்கை துரோகிகள், சில அயோக்கியர்களை இனம் காட்டியது. எதற்கும் சலனமடைபவன் அல்லன் என்றாலும் எனக்கு இதெல்லாம் புதிது. இயல்பில் அவ்வளவு எளிதாக ஒருவரை நம்ப மாட்டேன். மிகவும் யோசித்துத்தான்...
நூறு சீன்
அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும். இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான்...
என்னைப்பார், இட்லி இறங்கும்!
அவளை என்னால் ஐந்து நிமிடங்களுக்குமேல் ரசிக்க முடிந்ததில்லை. ஆனால் என் குழந்தை உள்பட எனக்குத் தெரிந்த எல்லா குழந்தைகளுக்கும் அவள் ஒரு ரோல் மாடலாக இருக்கிறாள். அவள் முகம் அச்சிட்ட கைக்குட்டைக்கு மவுசு இருக்கிறது. அவள் படம் போட்ட தம்ளரில் பால் கொடுத்தால் உடனே உள்ளே இறங்குகிறது. துணிக்கடைக்குச் சென்றால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வி, டோரா போட்ட கவுன் இருக்கா? டோரா போட்ட ஃப்ராக் இருக்கா...