வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள்.பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார். கரும்பு தின்னக்கூலியா? என்றாலும் ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்? என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி...
துல்லியங்களை வேட்டையாடுதல் (கதை)
ஆகச் சிரமமான கலை என்பது பாத்திரம் துலக்குவதாகத்தான் இருக்க வேண்டும் என்று பாரா நினைத்தான். தனது ஒவ்வொரு முயற்சியிலும் ஏதாவது ஒரு பிசிறு இருந்துவிடுவது அவனை மிகவும் உறுத்தியது. காப்பி தம்ளர், டபராக்கள், குக்கர் போன்றவற்றைத துலக்குவது, கலையிலேயே சேராது. உண்மையான சவால் எப்போதும் வாணலியிலும் காப்பி மேக்கரிலும் உள்ளது. அரையங்குலமாவது காந்தவிடாமல் யாருக்கும் வாணலியைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தவிர...
ஞானஸ்தன் (கதை)
பாரா ஒரு நாள் ஞானம் பெற்று பாராசான் என்னும் ஜென் குரு ஆனான். ஆனால் அவன் பாராசான் ஆனது ஊருக்குத் தெரியாது. அது ஊருக்குத் தெரியாது என்கிற சங்கதி பாராசானுக்கும் தெரியாது என்பதனால் ஏன் தன்னை நாடி முட்டாள்களோ சீடர்களோ இன்னும் வரவேயில்லை என்று அவன் தினமும் கவலைப்படலானான். ஒவ்வொரு புதிய முட்டாள் வரும்போதும் எப்படி அவர்களை மடக்கி, வியப்பூட்டி, பரவசப்படுத்தி, ஒரு ஓட்டாஞ்சில்லைத் தூக்கிப் போட்டு அதில்...