அப்பா எனக்கு உபநயனம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் இனாயத்துல்லாவுக்கு அவன் வீட்டில் சுன்னத் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக ஒரு மாதம். அவன் வீட்டில் விசேஷம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு மூன்று வருடங்கள் தள்ளிப்போட்டு, குரோம்பேட்டைக்குக் குடிவந்த பிறகுதான் அதைச் செய்தார்கள். இனாயத்துல்லா திகிலும் பரவசமுமாகத் தனக்கு நடக்கப்போகிற விஷயம் பற்றி என்னிடம்...
சுகம் பிரம்மாஸ்மி – 1
இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து, தோன்றியது தோன்றியபடி. இதில் என்...
என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு...