அந்தமாதிரி ஒரு தயிரை நான் வேறெங்கும் கண்டதுமில்லை, உண்டதுமில்லை. ஈரோடு வ.ஊ.சி. பூங்காவுக்கு அருகிலுள்ள லீ ஜார்டின் உணவகத்தில் பகலுணவுக்குச் சென்றால் கிட்டும். மண் கலயத்தில் எடுத்து வந்து வெட்டி வெட்டிப் போடுவார்கள். எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் போடுவார்கள். சற்றும் புளிக்காத, மென்மை மேவிய இட்லி போல் கனமான தயிர். இரு வருடங்களுக்குமுன் முதல்முறை புத்தகக்...
ஞான் அவிடெ…
ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக்...
கால் போன பாதை
காரணமோ, நோக்கமோ ஒன்றுமில்லை. போகலாம் என்று திடீரென்று தோன்றியதும் கிளம்பிவிட்டேன். மூன்று மணிநேரப் பேருந்துப் பயணத்தில், எப்போதும்போல் பசுமையின் பல வண்ணங்களைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன். நெல் வயல்களிலேயே எத்தனை வண்ணமாறுதல்கள்! ஃபோட்டோ ஷாப்பில் இத்தனை விதங்களை உருவாக்க முடியாது என்றே தோன்றியது. மிக நுணுக்கமான வண்ண வித்தியாசங்களை அடுத்தடுத்த பாத்திகள் காட்டிக்கொண்டே செல்கின்றன. எப்போதும் பயணம்...