குற்றவாளிகளைக் குறித்துப் பொதுவாக நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. ஒரு கிரிமினலை செய்தித்தாள் மூலம் அறிய நேர்ந்தால் ஒன்று, வெறுப்படைவோம். அல்லது, விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே உள்வாங்கி, படித்த மறுகணம் மறந்துவிடுவோம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரயில் பயணங்களிலும் அலுவலக இடைவேளைகளிலும் எப்போதாவது விவாதம் நடக்கும். குற்றம் செய்தது யாராவது அந்தஸ்துள்ள பெரிய மனிதர் எனக் கண்டால் ஒருவேளை...
ஒரு தொகுப்பும் சில நினைவுகளும்
எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று முன்னதாகவே அமேசான் என்னுடைய ‘மூவர்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. [திங்கள் அன்று எதிர்பார்த்தேன். இன்றே வந்துவிட்டது.] முதல் முதலில் வெளிவந்த என் சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை நான் எழுதிய சுமார் ஐம்பது புத்தகங்களுள் இந்த ஒன்றனுக்குத்தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியீட்டு விழா. பின்னாளில் தமிழகமெங்கும் பிரபலமான இலக்கியக் கூட்டக் குடி...
கண்ணீரின் ருசி
அலை உறங்கும் கடல் நாவலை இன்று கிண்டில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன். இன்று வரை என்னைச் சந்திக்கும் வாசக நண்பர்களுள் பத்துக்கு நாலு பேராவது இதைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. உமாவையும் அருள்தாஸையும் அற்புத மேரியையும் நீலுப்பாட்டியையும் சங்குக்கடை ராஜுவையும் தமது மனத்துக்கு நெருக்கமாக வைத்துப் பரவசத்துடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் மூச்சு விடாமல் பேசுகிற போதெல்லாம் எனக்குக் கண்ணீர்...
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
143 – ஒரு புதிய முயற்சி
என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். 2008லிருந்து நான் ட்விட்டரில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த குறுவரிகளின் தொகுப்பு இந்நூல். குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி ஆகிய மூன்று அச்சு நூல்களில் வெளியானவற்றின் தொகுப்பு. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின்...
முட்டை இறக்குமதி
யாளி முட்டை சிறுகதைத் தொகுப்பு FreeTamilEbooks.comல் வெளியாகியுள்ளது. இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முன்னுரை வாசிக்க இங்கே செல்லலாம்.
பிற இலவச மின் நூல்கள்: புதையல் தீவு | ரெண்டு | ஐஸ் க்ரீம் பூதம் | குற்றியலுலகம் | புக்கு
மின் நூலாக ரெண்டு
குங்குமம் வார இதழில் தொடராக வெளி வந்த இக்கதையை இப்போது FreeTamileBooks.com மூலம் இலவச மின் நூலாக வெளியிடுகிறேன். கதை படிக்க நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த மின் நூலை நானே என் சொந்த முயற்சியில் உருவாக்கியிருக்கிறேன் என்பதுதான் இப்போதைக்கு என்னைக் கிறுகிறுக்க வைக்கும் சங்கதி. ஐபுக் எடிட்டர், கேலிபர், ப்ரெஸ்புக் என்று தொடங்கி சமூகத்தில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான மின் நூல்...