சிவசங்கரிக்கு எழுதத் தொடங்கிய இரண்டாம் மாதம், என் வீட்டில் வைத்து முதலாம் சின்னதுரைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்தான் அப்போது அதற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். படு பயங்கர உணர்ச்சிமயமான கட்டம். சித்தர், பாலாம்பிகாவுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டிருக்கும்போது என்ன பேசுவார் என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தோன்றிய வரிகளை உணர்ச்சிமயமாகச் சொல்லிக்கொண்டே வரும்போது இந்த வரி தடுக்கியது...
இருவர் மற்றும் ஒருவர்
என்னிரு ஐபேட்களையும் என் மனைவியும் மகளும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டுவிட்டபடியால் எனக்கென ஒரு படிப்பான் [eReader] வாங்க நினைத்தேன். கிண்டில் வாங்கலாமா என்று நேற்று நண்பர் [FreeTamileBooks.com] ஶ்ரீநிவாசனிடம் கேட்டதன் காரணம் அதன் ஆறு இஞ்ச் பிடிஎஃப், மோபி வடிவம் போன்ற inbuilt சிக்கல்களால்தான். ஶ்ரீநிவாசனுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி, பதில் வந்தபோதுதான் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிந்தது. அடுத்த...
அஞ்சலி: பால கைலாசம்
பால கைலாசம் மறைந்துவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியுற மனமாரப் பிரார்த்திக்கிறேன். கைலாசம் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். ஆனால் எப்போது சந்தித்தாலும் அந்த வித்தியாசத்தை உணர்ந்ததில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்னால் ஈக்காடுதாங்கலில் அந்த அலுவலக வாசலில் உள்ள பெட்டிக்கடையில் அவரைச் சந்தித்தேன். ‘ராகவன், உணவு குறித்த உங்கள் குமுதம்...
புத்தாண்டு வாழ்த்து
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம். (திருவாய்மொழி 5.2.1)
நண்பர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2013ல் மின்வெட்டு குறைந்து யாவரும் நீண்ட நெடுநேரம் சீரியல் பார்த்துக் களிக்க எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
தலைப்பிட இஷ்டமில்லை
சாகிற காட்சியில் நடிப்பதைப் பொதுவாகக் கலைஞர்கள் விரும்பமாட்டார்கள். யாரையும் சாகடிக்காமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை இறுதிவரை நகர்த்திச் செல்ல முடியாது. வாழ்வைக் காட்டிலும் கதைகளில் மரணமானது மிகக் கோரமான வடிவம் கொள்ளும். ஒரு மரணக் காட்சியை எழுதுவது போன்ற இம்சை எழுத்தாளனுக்கு இங்கு வேறில்லை. எழுதுபவனை விடுங்கள். எடுப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய அவஸ்தை. ஒரு நடிகர் – அல்ல – ஒரு...
காக்கை வளர்ப்பு
அந்தக் காகம் எப்போதிருந்து சிநேகமானது என்று சரியாக நினைவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்து, இறந்துபோன என் தாத்தா அல்லது மாமனார் இருவரில் ஒருவராக அது இருக்கலாம் என்று என்றோ ஒருநாள் தோன்றியது. மறு பிறவியில் நம்பிக்கையில்லாதவன்தான். ஆனாலும் சமயத்தில் இப்படியும் தோன்றுவது, என்னைக் கேட்டுக்கொண்டல்ல.
நெய்வேலி பாராட்டு விழா
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவின் சில காட்சிகளை ஹரன் பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு கேமரா அல்லது வீடியோ ரெக்கார்டர் மட்டும் கிடைத்துவிட்டால் மனிதர்களுக்குத்தான் எப்படி கலையுணர்வு பொங்கிப் பீறிட்டுவிடுகிறது! இருப்பினும் இச்சரித்திரப் பதிவைச் சாத்தியமாக்கியதன்மூலம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட பிரசன்னாவுக்கு வேறு வழியில்லாமல் நன்றி சொல்லிக் கீழே ப்டம்...
எல்.பி.ரோடில் அரிக்காமேடு
அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது...
இடம், பொருள், ஆவல்
திரும்பவும் அவரை வாழ்வில் எதிர்கொள்ள நேரிடும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. என் தவறுதான். நான் எத்தனை முறை தொலைபேசி எண்ணை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் மாற்றிய ஒரு சில வாரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நம்பர் மாத்திட்டிங்கன்னு சொல்லவேயில்லியே?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிப்பார். ஆனால் மாற்றிய எண்ணை யாரிடமிருந்து பெற்றார் என்பதைச் சொல்லமாட்டார். என் எண்ணைக்...
சின்னக் குத்தூசி
பழம்பெரும் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி இன்று காலமானார். ஓராண்டு காலத்துக்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனக்குத் தெரிந்து இந்த ஓராண்டு மட்டுமல்ல – இதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே சின்னக்குத்தூசியை ஒரு தந்தையாக பாவித்து அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் நக்கீரன் கோபால். குத்தூசியின் புத்தகங்களைக்கூட நக்கீரன்தான்...
கஸ்தூரி ரங்கன்
தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கணையாழியின் நிறுவனருமான கி. கஸ்தூரிரங்கன் இன்று காலை காலமானார். சிலபேருடைய மறைவு வார்த்தையளவில் பேரிழப்பு. கஸ்தூரி ரங்கனின் மறைவு நான் உள்பட பலருக்கு வாழ்க்கையளவில் பேரிழப்பு.
விரிவாக எழுதுமளவுக்குத் தற்போது மனநிலை சுமூகமாக இல்லை. அவருக்கு அஞ்சலிகள்.
ஒன்றா, ரெண்டா ஆசைகள்?
சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை என் தாத்தா பேச்சுவாக்கில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்டேன். இன்னும் காதுகளை விட்டு அகலாமல் அப்படியே தங்கிவிட்டது அது. சொல்லப்போனால் திராவிட இயக்கம் என்கிற பதம் எனக்கு அறிமுகமானதே, அதிலிருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு பெண்டாட்டிகள் உண்டு என்பதாகத்தான். அப்படித்தான் என் தாத்தா சொன்னார்.
தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்
எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை...
புத்தாண்டு வாழ்த்துகள்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
[நன்றி: ஆண்டாள்]
கொண்டாட ஒரு தருணம்
நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...
அயோக்கிய சிகாமணி
பொதுவாக எனக்குக் கோபம் வராது. என்னை உசுப்பேற்றுவது மிகவும் கடினமான காரியம் என்று தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். என்னையறியாமல் இன்று மிகக் கடுமையான கோபத்துக்கு ஆட்பட நேர்ந்தது. விஷயம் இது: தெரிந்தவர் ஒருவர் வீட்டில் பிரச்னை. சில காலமாகவே. அவருக்கு வியாபாரத்தில் மந்தநிலை. எனவே பொருளாதாரச் சிக்கல். அடிக்கடி கணவன் மனைவிக்குள் பிணக்கு வரும். கோபித்துக்கொண்டு இருவரில் யாரும் அம்மா வீட்டுக்குப் போக...
நானேதானாயிடுக
என்னைவிட அழகாக இருக்கும் இப்படத்தை வரைந்தவர், என் நண்பர் சித்ரன் (என்கிற ரகு). இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி இங்கே சேமித்துவைக்கிறேன்.
அஞ்சலி: ஆர். சூடாமணி
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதை கேட்டு இரு வாரங்கள் முன்பு நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். இத்துடன் ஒரு கதை இணைத்திருக்கிறேன். பிரசுரிக்க இயலாது என்று கருதுவீர்களானால் திருப்பி அனுப்பிவிடலாம். உடன், போதிய தபால் தலை ஒட்டப்பட்ட கவர் உள்ளது. தங்கள் அன்புள்ள… புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்களிடம் எந்தப் பத்திரிகையும் கதை கேட்டுக் கடிதம் எழுதாது. பிரபலங்களிடம் மட்டும்தான். தவிரவும்...
ஆசிரியர் தின வாழ்த்துகள்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்.
பரிசோதனை
சில ட்விட்டர் நண்பர்களின் ஆலோசனைப்படி விண்டோஸ் லைவ் எடிட்டரைத் தரவிறக்கம் செய்து அதில் இருந்து இத்தளத்தில் நேரடியாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன். இது ஒரு பரிசோதனைப் பதிவு. குறிப்பிட்ட விஷயம் ஏதுமில்லை. சில தினங்களாகவே நீண்ட கட்டுரைகள் எழுத நேரமில்லாமல் இருக்கிறது. செம்மொழி மாநாடு தொடர்பாகவே சில கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியாமல் போய்விட்டது. அவசரத் தொடர்புக்கு ட்விட்டர் போதுமானதாக...


