ரத்தம் சொட்டச் சொட்ட காயம் பட்டபிறகு, செய்த தவறின் அடிப்படைக் காரணம், அறியாமை என்று தெரியவரும்போது வலியை மீறிய வேதனை ஒன்று வரும். ரத்த காயத்தைவிடத் தீவிரமானது அது. அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே இது விளங்கும். நாங்கள் தமிழ் பத்திரிகைச் சூழலில் பயின்றவர்கள். எல்லாம் கற்றுத்தரும் இந்த உலகம், காப்பிரைட் என்று ஒன்று இருப்பதை மட்டும் எப்போதும் மறைத்தே வைத்துவந்திருக்கிறது. படங்கள் விஷயத்தில் இது...
கிழக்கு ப்ளஸ் – 3
பகுதி 1 | பகுதி 2 தமிழ் பதிப்புலகம் ஒரு தாயற்ற குழந்தை. இங்கு எடிட்டர்கள் என்னும் இனம் இருந்து தழைத்ததில்லை. அவர்களது அவசியம் அல்லது முக்கியத்துவம் யாரும் உணரக்கூடியதாக இருந்ததில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பதிப்பாளர்களுக்கு மட்டும் இங்கு எடிட்டிங் ஓரளவு தெரியும். எடிட்டிங் என்றால் ப்ரூஃப் ரீடிங் என்பதே பொதுவில் அறியப்பட்ட நுட்பம். நூல்களுடன் வருடங்களைக் கழித்த அனுபவம் அவ்வப்போது...
கிழக்கு ப்ளஸ் – 2
பகுதி 1 குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக நாம் பிரத்தியேகப் பதிப்புகள் ஆரம்பிக்கவேண்டும். ஆடியோ புத்தகங்கள் செய்துபார்க்க வேண்டும். அனிமேஷன் சிடி உருவாக்கும் கலையை முயற்சி செய்யவேண்டும். தமிழில் மட்டுமல்லாமல் சாத்தியமுள்ள பிற அனைத்து மொழிகளுக்கும் பரவவேண்டும். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடவேண்டும். இவையெல்லாம் கிழக்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் – அதாவது 2003ம் ஆண்டின் மத்தியில் நானும்...
கிழக்கு ப்ளஸ் – 1
இதுவரை நான் பேசியதில்லை. கிழக்கு பற்றி. அங்கு என் பணி பற்றி. இது ஆரம்பித்த விதம் பற்றி. அடைந்த வெற்றிகள் பற்றி. நேர்ந்த வீழ்ச்சிகள் பற்றி. தடுமாறிய கணங்கள் பற்றி. தட்டிக்கொண்டு எழுந்து நடந்த தருணங்கள் பற்றி. பேசாததற்கான காரணங்கள் பல. அவை அத்தனை முக்கியமில்லை. இப்போது பேசலாம் என்று நினைப்பதற்கான காரணம் ஒன்று. அது முக்கியமானது. பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விடி ஃபண்ட் என்னும் வென்ச்சர் கேப்பிடல்...