Categoryபுத்தகம்

இருண்ட மலைகளும் இனப்பகை அரசியலும்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருக்கிறேன். அப்படிச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்று இப்போது புரிகிறது. ஏனென்றால் அன்று இம்பால் பள்ளத்தாக்கை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு மணிப்பூரைப் பார்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். உண்மையில் மணிப்பூரின் மொத்த பரப்பளவில் இம்பால் என்பது ஒன்றுமேயில்லாத ஒரு சிறு புள்ளி. ஆனால் அந்நிலப்பரப்பில் வாழும் மெய்தி பெரும்பான்மை சமூகத்தினர்தாம் மொத்த...

மணிப்பூர் கலவரம்: புத்தக முன்பதிவு விவரம்

வெளிவர இருக்கும் என்னுடைய மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலுக்கு இப்போது முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வோருக்கு ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் இருபத்தைந்து சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கைப் பின் தொடர்ந்து பதிவு செய்யலாம். புத்தகம் மிக விரைவில் வெளிவரும்.

மணிப்பூர் கலவரம்: புதிய புத்தகம்

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம். இதுதான் தலைப்பு. கடந்த ஐந்து மாதங்களாகச் செய்துகொண்டிருந்த ஆய்வு நிறைவு பெற்று, இப்போது புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எழுத்து பிரசுர வெளியீடாக விரைவில் வெளிவரும்.
அட்டைப் படம் வடிவமைப்பு: பாலா, சேலம்.

தமிழ், நூல்கள், நூலகங்கள்: அன்றும் இன்றும்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழா – 2023 கொண்டாட்டங்கள், ஏப்ரல் 23ம் தேதி அன்று சென்னை நகரில் 18 நூலகங்களில் நிகழ்ந்தன.  தேவநேயப் பாவாணர் மாவட்ட மத்திய நூலக அரங்கில் இதன் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
உரையின் யூட்யூப் லிங்க் இங்கே உள்ளது.

எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?

புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5. விறுவிறுப்பே இல்லாமல் இருப்பது 6. சுவாரசியம் அற்று இருப்பது 7. பண்டித மொழியில் எழுதியிருப்பது 8. தொட்ட...

எழுத்தாளரும் பதிப்பாளரும்

இந்நாள்களில் எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. எழுத்தாளராகவோ பதிப்பாளராகவோ இல்லாதோரும் பேசுகிறார்கள். அக்கப்போர் என்றாகிவிட்டால் ஆளுக்கொரு தர்ம அடி போட்டுவிட்டுப் போய்விடுவது தேசிய குணமல்லவா? இருக்கட்டும். சிறிது வேறு மாதிரியான எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு குறித்து ஒரு தகவல் படிக்கக் கிடைத்தது. நல்லதையும்தான் பேசிப் பார்ப்போமே. அவர் ஒரு புலவர். ஆன்மிகம் சார்ந்து மட்டுமே...

மெட்ராஸ் பேப்பர் விழா

மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 11ம் தேதி புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. விழாவினை நண்பர் கபிலன் (ஸ்ருதி டிவி) நேரலையில் கண்டு களிக்க வழி செய்தார். பெருந்திரளாகக் கூடிய வாசகர்களின் வாழ்த்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் தந்தது. விழாவின் வீடியோக்கள் கீழே உள்ளன. விழாவில் எனது வரவேற்புரை...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி