Categoryகதை

எடிட்டர்

சில நாள்களாக அந்த எழுத்தாளருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தனது கணிப்பொறியைத் தன்னைத் தவிரவும் வேறு யாரோ இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பேயாக இருக்கலாம். அல்லது எங்கிருந்தோ ரிமோட்டில் வேலை செய்யத் தெரிந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர். ஆனால் அப்படி ரிமோட் ஆக்சஸ் எதையும் அவர் யாருக்கும் தந்திருக்கவில்லை ஆதலால் பேயாகத்தான் இருக்கும் என்று வலுவாக சந்தேகப்பட்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் ஒரு...

ஒன்றுமில்லாமை

உறுத்தலை இன்னும் நீட்டித்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். எதையும் மாற்றாமல் மறைக்காமல் சொல்லிவிட முடிவு செய்து மனைவியை அழைத்தான். ‘உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீ ஒருவேளை அதிர்ச்சியடையலாம்.’ ‘என்ன?’ ‘இதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மன்னிப்பும் கேட்கமாட்டேன். ஆனாலும் உன் வருத்தத்தை நான் புரிந்துகொள்வேன்.’ ‘சரி, சொல்.’ ‘நான் மதம்...

குறுஞ்செய்தி

வேறெதுவும் இல்லை. வெறும் குட் மார்னிங். தினமும் வருகிறது இக்குறுஞ்செய்தி. ஒரு நாள் தவறாமல் பல மாதங்களாக வருகிறது. பதில் எதிர்பார்ப்பதில்லை. குட் மார்னிங் சொல்வது தவிர வேறெதுவும் பேசுவதில்லை. நீங்கள் யார், எதற்காக எனக்கு தினமும் குட் மார்னிங் அனுப்புகிறீர்கள் என்று கேட்டாலும் பதில் வருவதில்லை. அவனுக்கு சில சமயம் சலிப்பாக இருக்கும். சில சமயம் கோபம் வரும். குறிப்பிட்ட எண்ணை ட்ரூ காலரில் போட்டுப்...

பிரியாணி

அதிகாலை மூன்றரை மணிக்குத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார்கள். உடனே கிளம்பி ஸ்டேஷனுக்கு வரவும். மதியம் ஒரு மணி வரை ஏர்போர்ட் ட்யூட்டி. பெரியசாமி கண் எரிச்சலுடன் குளித்து, யூனிஃபார்ம் அணிந்து புறப்படத் தயாரானபோது மணிமேகலை அவருக்குக் காப்பி கொடுத்தாள். ‘ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவிங்க இல்ல?’ ‘ஆமா.’ விடைபெற்று வெளியே வந்து அவர் சைக்கிளை எடுத்தபோது சொன்னாள்...

மரண அறிவிப்பு

ஒரு பறவையின் மரணத்தை அவன் கண்டதில்லை. அநேகமாக யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். முதல் முறையாக அப்படி ஓர் அனுபவம் தனக்கு வாய்க்குமோ என்று நினைத்தான். வீட்டு வாசலில் அந்தக் காகம் அமர்ந்திருந்தது. நெருங்கி அருகே சென்றபோதும் அசையாமல் அப்படியே இருந்தது. இது சிறிது வியப்பாக இருந்தது. அதன் கண்களைச் சுற்றி சாம்பல் நிறத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தாற்போல இருந்தது. காகத்தின் கழுத்துப் பகுதி இயல்பாகவே...

கண்ணி

சில விஷயங்களில் எளிதாக முடிவெடுக்க முடிவதில்லை. ஒரு பொறுப்பின் கண்ணிக்குள் சிக்கிக்கொள்ளும்போது இது இன்னும் சிரமமாகிறது. கட்டற்ற தனி மனித சுதந்தரம் என்பது எப்போதும் திருமணத்துக்குப் பிறகு திரும்பக் கிடைக்கப் போவதில்லை. செய்வதற்கு ஒன்றுமில்லை. இதையும் உள்ளடக்கியதாகவே வாழ்க்கை இருக்கிறது. எதையும் தொடங்கும் முன்னால் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். முன்பேகூடச் சொல்லியிருக்க...

300 சொற்கள்

சில காலமாக ஒரு செயல்திட்டம் போல வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கதைகளாவது எழுதுகிறேன். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி. என்ன பிரச்னை இருந்தாலும் சரி. எதை நிறுத்தினாலும் இதை நிறுத்துவதில்லை. முதலில் இப்படிக் கட்டாயமாக எழுத வேண்டும் என்ற விதி சிறிது கஷ்டமாக இருந்தது. விரைவில் அது ஒரு மனப் பழக்கமாகி, எழுதாவிட்டால் Uneasy ஆகிவிடுகிறேன். இன்னொன்று, இது யாருக்காகவும், எந்தப் பத்திரிகைக்காகவும் எழுதவில்லை...

பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்?

தாட்சு எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் அவளைக் குறித்த நான்கு வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அவையாவன: வதந்தி 1 அவளுக்கு இருபத்து மூன்று காதலர்கள் இருக்கிறார்கள். முறை வைத்துக்கொண்டு தினம் ஒருவனுடன் மாலை வேளைகளில் வெளியே செல்வாள். அவளது அனைத்துக் காதலர்களுக்கும் அவளைக் குறித்தும் அவளது பிற காதலர்களைக் குறித்தும் தெரியும். ஆனால் அதைப் பற்றி யாரும் கேட்பதில்லை. ஒவ்வொரு காதலனும்...

நிழலற்றவன் – முன்னுரை

இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன்...

இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?

இத்தொகுப்பில் உள்ள கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன். ஆதியிலே...

நிழலற்றவன்

இது ஒரு பிரச்னை. எப்போதும் இருப்பதல்ல. இப்போது சிறிது காலமாகத்தான் இவ்வளவு ஞாபக மறதி. வயதானால் நினைவுகள் ஒவ்வொன்றாக உதிரும் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அப்படியொன்றும் தனக்கு வயதாகவில்லை என்று உடனே நினைத்துக்கொண்டான். இருந்தாலும் மறந்துவிடுகிறது. நேற்றுக் காலை பல் துலக்கிய பின்பு பிரஷ்ஷை அதன் வழக்கமான இடத்தில் வைக்காமல் எடுத்து வந்து டிவி ஸ்டாண்ட் அருகே வைத்துவிட்டான். மறுநாள் நெடுநேரம்...

மாயா

உலகை நல்லபடியாக அழிதது முடித்தபின் கடவுள் ஓய்வாக ஒரு மரத்தடியில் அமர்ந்தார். ‘நீ மிச்சம்’ என்றொரு குரல் கேட்டது.
#குறுங்கதை

நாள்காட்டி (கதை)

புராதனமான அந்த நாள்காட்டியை அவன் பரணில் இருந்து எடுத்தான். அது எப்போது எப்படி அங்கே வந்தது என்று தெரியவில்லை. அப்பாவோ, அவரது மூதாதையர் யாரோ உபயோகித்திருக்க வேண்டும். சுடுமண் பலகையில் அந்நாள்காட்டி எழுதப்பட்டிருந்தது. எழுத்துகளுடன் சில சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. விளக்கப்படங்களாக இருக்கலாம் என்று நினைத்தான். பலகை பெரும்பாலும் சிதைந்திருந்தது. சந்தேகமின்றி ஒரு தொல்பொருள். ஜாக்கிரதையாக அதனைக்...

ஒப்பனைக் கலை (கதை)

எனக்கும் அவர்கள் இருவருக்கும் ஒரே வயது. சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் ஒரே நாள், ஒரே சமயம், ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள். அவரவர் அம்மாமார்களுக்கு வேறு வேறு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தது தவிர எங்கள் பிறப்பில் நாள், கோள் வேறுபாடுகளே கிடையாது. தவிர, பிறந்தது முதல் நாங்கள் மூவரும் ஒரே வீதியில்தான் வசித்து வருகிறோம். படித்தது ஒரே பள்ளிக்கூடம். ஒரே கல்லூரி. எங்களுக்குள் சகோதரப் பாசமோ, நட்புணர்வோ...

ஒரு காதல் கதை (கதை)

வகுப்புகளில் அவளது மாஸ்கை அவன் நெடுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு வெண்புறாவின் சிறகைப் போலிருந்தது அது. காதுகளின் விளிம்பில் இழுத்துப் பொருத்தும்போது மற்ற அத்தனைப் பேருக்கும் காது மடல்கள் சிறிது வளையும். அவளுக்கு மட்டும் எப்படியோ அப்படி ஆவதில்லை. மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது மாஸ்கின் நடுவே சிறு ஈரப் படலம் உண்டாகும். பார்க்கக் கொடூரமாக இருக்கும். அவளுக்கு அது இல்லை. அவள் தனது குரலை...

ராம் 2 (கதை)

நாம் காதலிக்கலாம் என்று முதலில் சொன்னது அவள்தான். நம் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு சொன்னதும் அவள்தான். முதலாவதை மகிழ்ச்சியுடனும் அடுத்ததை வேறு வழியில்லாமலும் அவன் ஏற்றுக்கொண்டான். மனித வாழ்வில் இரண்டு வருடங்கள் என்பது பெரிய கால அளவு இல்லைதான். ஆனாலும் அவனுக்கு அந்த இரண்டு வருடங்களும் நினைவுகூரும் போதெல்லாம் திருப்தி தரத் தக்கதாகவே இருந்தது. காதலில் அர்த்தபூர்வமான...

கருவி (கதை)

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது என்று பாவாடைச் சாமி திலோத்துமையம்மாளிடம் சொன்னார். ‘நான் அத்தனெ நல்லவளான்னு தெரியலியே சாமி. இல்லனா புருசன் செத்த பத்தாநாளே புள்ள ஏன் சொல்லிக்காம போனான்னு தெரியாம கெடந்து தவிப்பனா?’ என்று அவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். பாவாடைச் சாமி மேலும் சில நல்ல வார்த்தைகளும் ஆறுதலும் சொல்லி...

ஐந்தரை அறிவு (கதை)

இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நான்கைந்து நாய்கள் ஓயாமல் ஓலமிட்டதை அவன் கேட்டான். நிறுத்தவேயில்லை. மணிக்கணக்கில் அவை அழுதுகொண்டே இருந்தன. இரவில் நாய் அழுதால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று ஊரில் பாட்டிக் கிழவி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. நாய் அழும் சத்தம் கேட்காமல் உறங்கிவிட்டவர்கள் அசம்பாவித வளையத்துக்குள் வரமாட்டார்கள். யார் விழித்திருந்து கேட்கிறார்களோ, அவர்களில் யாருக்காவதுதான்...

திருகுவலி (கதை)

நள்ளிரவு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இப்படிக் காலமில்லாக் காலத்தில் பொதுவாக சுந்தர பெருமாள்தான் அழைப்பான். சிறிது எரிச்சலுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தேன். அவன்தான். ‘டேய், புத்தரின் இன்னொரு பல்லை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.’ என்று சொன்னான். கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘முதல் பல்லை எந்தக் கடையில் அடகு வைத்தாய்?’ என்று கேட்டேன். ‘அது என்னிடம் இல்லை. இலங்கையில்...

உண்மைக்கு மிக அருகில் (கதை)

பிராந்தியத்தில் அவளைப் போல் ஒரு பேரழகியை இதற்குமுன் பார்த்ததில்லை இல்லை என்று கிழவர்களே சொன்னார்கள். ‘இவளுக்கு இந்த ஜென்மத்தில் திருமணமே நடக்காது. இந்த அழகுக்கு ஈடு கொடுக்கும் ஒரு ஆண்மகன் எங்கும் இருக்க முடியாது’ என்று அவளைத் தமது மானசீகத்தில் காதலித்துக்கொண்டிருந்த ஊரின் அனைத்து வாலிபர்களும் கூடிப் பேசி முடிவு செய்தார்கள். ‘சிலதெல்லாம் மனத்துக்குள் ரசிப்பதற்காக மட்டும்தான்...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி