பழம்பெரும் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி இன்று காலமானார். ஓராண்டு காலத்துக்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனக்குத் தெரிந்து இந்த ஓராண்டு மட்டுமல்ல – இதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே சின்னக்குத்தூசியை ஒரு தந்தையாக பாவித்து அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் நக்கீரன் கோபால். குத்தூசியின் புத்தகங்களைக்கூட நக்கீரன்தான்...
கஸ்தூரி ரங்கன்
தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கணையாழியின் நிறுவனருமான கி. கஸ்தூரிரங்கன் இன்று காலை காலமானார். சிலபேருடைய மறைவு வார்த்தையளவில் பேரிழப்பு. கஸ்தூரி ரங்கனின் மறைவு நான் உள்பட பலருக்கு வாழ்க்கையளவில் பேரிழப்பு.
விரிவாக எழுதுமளவுக்குத் தற்போது மனநிலை சுமூகமாக இல்லை. அவருக்கு அஞ்சலிகள்.
அஞ்சலி: ஆர். சூடாமணி
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதை கேட்டு இரு வாரங்கள் முன்பு நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். இத்துடன் ஒரு கதை இணைத்திருக்கிறேன். பிரசுரிக்க இயலாது என்று கருதுவீர்களானால் திருப்பி அனுப்பிவிடலாம். உடன், போதிய தபால் தலை ஒட்டப்பட்ட கவர் உள்ளது. தங்கள் அன்புள்ள… புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்களிடம் எந்தப் பத்திரிகையும் கதை கேட்டுக் கடிதம் எழுதாது. பிரபலங்களிடம் மட்டும்தான். தவிரவும்...
அஞ்சலி
இங்கு லிங்க் கொடுத்த ஐபிஎன் லைவ் வீடியோ வேலை செய்யவில்லை. இனி அது வேலை செய்தும் உபயோகமில்லை. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார் என்று சற்றுமுன் செய்தி வந்திருக்கிறது. அவரோடு பயணம் செய்த நால்வரும் உயிர் இழந்திருக்கிறார்கள். மோசமான விபத்து. கர்னூலுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் ருத்ரகுண்டா மலைப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. நேற்று காலை தொடங்கி ஒரு...