ArchiveAugust 2008

வரான் வரான் பூச்சாண்டி

varaan_varaan_boochandi சமீபத்தில் இந்தப் பாடல் அடிக்கடி என் காதில் விழுகிறது. அடிக்கடி முணுமுணுக்கிறேன். பேருந்தில் ஒருமுறை அருகிலிருந்தவரின் மொபைலில் ரிங் டோனாக ஒலித்து வியப்பூட்டியது. எந்தப் படத்தில் என்று பலரிடம் கேட்டுப்பார்த்தும் பதிலில்லை. யார் இசையமைத்தது என்று தெரியவில்லை. பாடியவர் குரலும் பரிச்சயமில்லாதிருக்கிறது. ஆனால் சுண்டியிழுக்கிறது. வீட்டில் என் குழந்தை விரும்பிக் கேட்கிறது. மற்ற...

யாளிமுட்டை

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, ‘படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?’ என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி...

என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு...

வலி உணரும் நேரம்

எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.

வாழ்வார்கள்

விக்கிரகத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்றெல்லாம் நம்பி, கைகூப்பித் தொழும் பருவம் கடந்தபின்னும் சில பாலிய வழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. கிருஷ்ண ஜெயந்தி அதிலொன்று. எங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி மிகவும் விசேஷமானது. அன்றைக்கு அம்மா சாப்பிடமாட்டாள். காலை முதல் கிருஷ்ண ஸ்மரணை. கிருஷ்ணரை நினைத்தபடி கைமுறுக்கு, வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை, வாழைப்பழம் போட்ட அப்பம் என்று ஆரம்பித்து ஒரு மெனு கார்ட்...

ஈரோடில் இரண்டு நாள்

அந்தமாதிரி ஒரு தயிரை நான் வேறெங்கும் கண்டதுமில்லை, உண்டதுமில்லை. ஈரோடு வ.ஊ.சி. பூங்காவுக்கு அருகிலுள்ள லீ ஜார்டின் உணவகத்தில் பகலுணவுக்குச் சென்றால் கிட்டும். மண் கலயத்தில் எடுத்து வந்து வெட்டி வெட்டிப் போடுவார்கள். எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் போடுவார்கள். சற்றும் புளிக்காத, மென்மை மேவிய இட்லி போல் கனமான தயிர். இரு வருடங்களுக்குமுன் முதல்முறை புத்தகக்...

ஒரு மாணவனின் புத்தகம்

* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். – யாமாசான் * உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. – அகிரா குரோசாவா. கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்...

அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் [11.12.1918 – 03.08.2008]

1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம். சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப் படைப்புகளல்ல என்று பலபேர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி