ArchiveJanuary 2011

என்ன செய்யப் போகிறாய்?

சுமார் பதினாறு, பதினேழு வருடங்களுக்கு முன்னர் மண்டபம் பகுதியில் [ராமநாதபுரம் மாவட்டம்] சில மீனவர்களைச் சந்தித்து பேட்டி கண்டேன். அந்தப் பேட்டி, மண்டபம் முகாமுக்கு அப்போது வந்துகொண்டிருந்த இலங்கை அகதி மக்கள் தொடர்பானது என்றபோதும் மீனவர்களின் வாழ்க்கை, தொழில் சார்ந்த சில விஷயங்களும் அதில் பேசப்பட்டன. இப்போது பேசப்படுகிற மீனவர்களின் பிரச்னை அப்போதும் இருந்தது. பெயர் மறந்துவிட்டது என்றபோதும் நான்...

இன்றே கடைசி

34வது சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக இன்று முடிவடைந்தது. கடந்த 13 நாள்களில் வராத கூட்டமெல்லாம் இன்று வந்துசேர, வளாகம் மகத்தான மக்கள் வெள்ளத்தில் அழகாகக் காட்சியளித்தது. என் இடைவிடாத 13 நாள் பிரார்த்தனைக்கும் பலனாக இன்று வாசல் ஈட்டிக்காரக் கூட்டத்துக்கும் மக்கள் அதிகம் செவி சாய்க்கவில்லை. காலை முதலே அனைத்துக் கடைகளிலும் நல்ல விற்பனை இருந்தது. இதுநாள் வரை தவற விட்டவர்களும்...

ஆடுகளமும் ஆய்வுக்களமும்

கட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இன்று புறப்பட்டேன். அயன், ஆதவன், ஆடுகளம், காவலன், கலைஞரின் இளைஞன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பெரும் படைதான் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். சுமாரான கூட்டம்தான். மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு பெரிய அலை அடிக்கத் தொடங்கியது. அதுவும் இரண்டு மணிநேரத்துக்குள்ளாகவே வடிந்துவிட்டது. இத்தனைக்கும் இன்று...

மீட்டருக்கு மேலே.

கடந்த இரு தினங்களாக, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: ‘கிழக்கு ஸ்டாலில் வைரமுத்து எப்படி?’ என் பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்! அதெல்லாம் சத்யா, பிரசன்னா டிபார்ட்மெண்ட். என் தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். இரு தினங்கள் முன்னர் நான் கண்காட்சிக்குச் சென்றபோது கிழக்கு அரங்கம் வாசலில் பெட்டி பெட்டியாகக் கொண்டுவந்து...

ஒரு ஞாநியும் மூன்று பானைகளும்

எதிர்பாராத சில காரணங்களால் இன்றைக்குக் கண்காட்சிக்கு மிகவும் தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. எல்லோரும் கூட்டம் இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் என் கண்ணுக்கு நியாயமான கூட்டம் இருந்ததாகவே தெரிந்தது. ஒரு வேலை நாளில் இதைவிட அதிகக் கூட்டம் இருப்பது சாத்தியமில்லை. வருகிற கூட்டத்தில் பாதியை வாசலிலேயே ஈட்டிக்காரர்கள் மாதிரி மடக்கி உட்கார வைக்கிற அராஜகத்தைப் பற்றி மட்டும் ஏன் யாரும் ஒன்றும்...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

நான் வசனம் எழுதியிருக்கும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ விரைவில் வெளிவரவிருக்கிறது. எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் படம் பார்க்க வரலாம்’ என்று சற்றுமுன் இயக்குநர் வடிவுடையான் போனில் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. கீழே சில புகைப்படங்கள். விரைவில் ஒரு கட்டுரை.

கவிதைக்கு வந்த கஷ்டகாலம்

ஒரு வழியாக பபாசி ஏற்பாடு செய்திருக்கும் ஜனதா க்ரெடிட் கார்ட் கவுண்ட்டர் இன்று இயங்க ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிந்தது. ஆனால் துரதிருஷ்டம், அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்பவில்லை. க்ரெடிட் கார்டு என்ற போர்டும் கீழே ஒரு மிஷினும் இரண்டு பெண்களும் தனியாக அம்போவென்று உட்கார்ந்திருந்தார்கள். பல இடங்களில் கடைக்காரர்கள் இதைப் பொருட்படுத்த மறுக்கிறார்கள். காசு கொடு, புத்தகம் எடு. தீர்ந்தது விஷயம்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter