ArchiveMarch 2016

பொன்னான வாக்கு – 11

பெட்ரோல் விலை, தங்கம் விலை, பங்குச் சந்தைப் புள்ளிகள், தமிழக அமைச்சரவை போன்ற சில சங்கதிகள் எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. என்ன காரணத்தால் பெட்ரோல் விலை திடீரென்று இன்று நடு ராத்திரி ஒண்ணே முக்கால் ரூபாய் ஏறியது என்று கேட்டால் நம்மால் பதில் சொல்ல முடியுமா? ஜெயலலிதா ஏன் ஒரு அமைச்சரை டமாலென்று தூக்கியடிக்கிறார் என்று சொல்ல முடியுமா? இன்று ஏறிய தங்கத்தின் விலை அட்சய...

சில கடிதங்கள்

தினமலர் தேர்தல் களத்தில் நான் எழுதும் பத்திக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. இதில் எழுபது அல்லது எண்பது சதவீதம் பிரசுரிக்க இயலாதவை. நான் மட்டுமே படித்து ரசிப்பதற்காக எழுதப்படுபவை. அவை போக மிச்சமுள்ளவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறேன். பொறுமையாக எடுத்துத் தொகுக்கவும் , பிழை திருத்தம் செய்யவும் நேரமில்லை. நண்பர்கள் தவறாக எண்ணவேண்டாம். இனி வரும் நாள்களில் மின்னஞ்சல்கள் வரும்போதே தனியே...

பொன்னான வாக்கு -10

ஓட்டுக்குப் பணம் வாங்கினால் ஓராண்டு காலச் சிறை என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகிற தேர்தலை மகா ஜனங்கள் ஒரு திருவிழா ஆக்குவதே மேற்படி சங்கதியால்தான். அப்படி இருக்கிற நிலையில் இப்படியெல்லாம் இசகுபிசகாகச் சட்டம் கொண்டு வந்து அண்டர்வேருக்குள் அணுகுண்டு வைத்தால் என்ன அர்த்தம்? இதெல்லாம் மனித உரிமை மீறல் வகையறாவுக்குள் வருமா என்று தெரியவில்லை.

பொன்னான வாக்கு – 09

ஞாயிற்றுக் கிழமை ஒரு சம்பவம் நடக்கிறது. உடுமலைப் பேட்டையில் தலித் இளைஞர் ஒருவரை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, சாதி வெறி மண்டிய தாதாக்கள் சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு பைக்கேறிப் போகிறார்கள். திங்கள் போனது, செவ்வாய் போனது, புதனும் போய்விட்டது. இதனை கௌரவக் கொலை என்று சொல்லலாமா, ஆணவக் கொலை என்று குறிப்பிடலாமா என்று வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

சொந்த சோகம்

தினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன. நானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே. திட்டுகிறவர்கள்கூட...

பொன்னான வாக்கு – 08

ஆக, விஜயகாந்த் தனித்துக் களம் காண முடிவு செய்துவிட்டார். தெய்வாதீனமாக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே பக்கமாக ஒதுங்கிப் போனதால் திமுக, அதிமுகவும் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுதந்தரமாக வேலை பார்க்கலாம். இந்தப் பக்கம் பாமக, அந்தப் பக்கம் பாஜக. எண்டர்டெயின்மெண்டுக்கு இருக்கவே இருக்கிறது மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மேற்படி கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மநகூ.

பொன்னான வாக்கு – 07

இன்னார் முதல்வர் ஆகலாம் அல்லது இன்னார் ஆகக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்தரமும் ஜனநாயகமும் கேவலம் ஒருத்தருக்கு இந்த விருப்ப சௌகரியத்தைக்கூடக் கொடுக்கவில்லையென்றால் அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும் சுதந்தரமும்? எனவே அன்புமணியும் முதல்வராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.

பொன்னான வாக்கு – 06

எனக்கு காந்தியை நினைக்கும்போதெல்லாம் இயேசுவின் ஞாபகம் வருகிறது என்று யாரோ சொன்னதைச் சிறு வயதில் படித்த நினைவிருக்கிறது. அந்த யாரோ யார் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் தோன்றியபாடில்லை. பிரபல பொன்மொழிகளை எழுதும் திரு. யாரோவாகத்தான் அவர் இருக்கவேண்டும். ஆனால் எனக்கு காந்தியை நினைத்தால் இன்னொருத்தர் ஞாபகமெல்லாம் வருவதில்லை. மு.க. ஸ்டாலினை நினைத்தால்தான் இங்கிலாந்து இளவரசர் சார்லஸின்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி