ArchiveJanuary 2018

பூனைக்கதை – ஹரன் பிரசன்னா மதிப்புரை

பா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது புத்தகங்களைப் பற்றிய என் வெளிப்படையான கருத்துகளை வைத்துள்ளேன். பாராவின் மிக முக்கியப் பண்பு, எந்த ஒரு சிறு நெருடலும் இன்றி, அவற்றை என்...

ஆண்டாள் படும் பாடு

நேற்று புத்தகக் காட்சியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஆர். வெங்கடேஷின் தொலைபேசி அழைப்பு மூலம் எனக்குப் புதிய தலைமுறை டிவியில் என் தலை உருட்டப்பட்டுக்கொண்டிருந்த விவரம் தெரியவந்தது. அடுத்தடுத்து இன்னும் இரண்டு நண்பர்கள் அழைத்து அதையே சொன்னார்கள். வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பாதி நிகழ்ச்சி முடிந்திருந்தது. திமுக கண்ணதாசன் பேசி முடித்து, ஆசீர்வாதம் ஆச்சாரி பதினொரு மணி சீரியல் கதாநாயகி போல...

சிமிழ்க்கடல்

எனக்கு மட்டும் எழுத வராமல் போயிருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வேன். முன்பெல்லாம் ஒரு துறவியாக, அல்லது ஒரு பொறுக்கியாக ஆகியிருப்பேன் என்று தோன்றும். அந்த இரண்டாவது சிந்தனை இப்போது இல்லை. மிக நிச்சயமாக ஒரு பொறுக்கியாகத்தான் போயிருப்பேன். சிறு வயது முதலே என் அந்தரங்க விருப்பம் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் வகுப்பில் இருந்தபோது என்னோடு படித்த...

வெஜ் பேலியோ – அனுபவக் குறிப்புகள்

வெஜ் பேலியோ தொடர்பாக இணையத்தில் நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்’ கிழக்கு பதிப்பகம் மூலம் வருகிற சென்னை புத்தகக் காட்சியில் நூலாக வெளியாகிறது. இந்தப் புத்தகத்துக்கு ஒரு விசேடம். இக்கட்டுரைத் தொகுப்பை நான் முதலில் மின் நூலாக அமேசானில் வெளியிட்டேன். ஒரு சில மாதங்களிலேயே மிக நல்ல விற்பனை உயரம் தொட்டது. மின் நூலாக வெளியிட்ட ஒன்றின் இரண்டாம் பதிப்பை அச்சுப்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி