பா.ராவின் ஆயிரம் பக்க “யதி” நாவலை இன்று தான் படித்து முடித்தேன். படிக்க சிரமமான நாவல் ஒன்றுமல்ல. தொடர்ந்து படித்தால் நான்கைந்து நாட்களில் யாராலும் படித்து முடிக்க முடியும். நான் புத்தகத்தை வாங்கிய நாள் இரவில் முதல் 90 பக்கங்களை படித்து ஒரு வாரம் கழித்து மீண்டும் படித்து விட்டு விட்டு படித்தேன். எந்த கட்டத்திலும் அலுப்பூட்டவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும் – அதற்கு காரணம் பா.ரா கதையை...
யதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்
சிறு வயதிலிருந்தே நாம் ஆச்சரியமாகவும் புதிராகவும் காண்பது துறவிகளை அல்லது சாமியார்களை. கடவுளிடம் அதீத பக்தி கொள்ளுதல், பெரும் பொருளியல் இழப்பை சந்தித்தல், காதல் தோல்வி அடைதல், குடும்பக் கஷ்டங்களைத் தாங்க முடியாமை போன்றவை துறவைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகிறது. யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத நம் அக ஓட்டம், மேற்சொன்ன காரணங்களுக்கு அப்பாலும், பல்வகை காரணிகளால்...