சரித்திரம் தூக்கிக் கொஞ்சுகிறதோ, போட்டு மிதிக்கிறதோ. பெற்ற தாய் தனது பிள்ளைகளை கவனிக்காமலா இருப்பாள்? காந்தாரியைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். துர்சலை என்ற ஒரு பெண் குழந்தை உள்பட அவளுக்கு நூற்று ஒரு குழந்தைகள். அத்தனைப் பேரின் பெயர்களையும் அவள் எப்போதும் நினைவில் வைத்திருந்திருப்பாள். தனித்தனியே கூப்பிட்டு சாப்பிட்டாயா, குளித்தாயா, சண்டை போடாதே, உட்கார்ந்து படி என்று சொல்லியிருப்பாள்...
அழைப்பான்களின் காலம்
வாட்சப், ஃபேஸ்புக் மெசஞ்சர், டெலிகிராம் மற்றும் கட்டண மெசேஜ் சேவைகளை எதற்காக, எவ்வளவு பயன்படுத்துகிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். வாட்சப் வந்த பின்பு கட்டண மெசேஜ் அனுப்பும் வழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது என் மனைவிக்கு மட்டும் சாதாரண மெசேஜ் அனுப்புவேன். அதுவும் இருவருடையதும் ஐபோன் என்பதால் காசில்லா ஐமெசேஜ். மற்றபடி வங்கியில் இருந்து, க்ரெடிட் கார்ட் நிறுவனத்தில் இருந்து, இதர...
ரிப்
முன்பெல்லாம் நாளிதழ்களில் என்ன வெளியாகியிருந்தாலும், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் வழக்கம் உண்டு. இதே போலத் தான் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் எதையும் மறு வினா இன்றி நம்பக்கூடிய ஒரு பெரும் கூட்டம் இருந்தது. சினிமா செய்திகள், வதந்திகளைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையில் வெளியானாலுமே அது சரிதான் என்று நினைப்பார்கள். சிறிது படித்தவர்கள்...
கீரை வாங்கும் கலை
நானும் எவ்வளவோ வருடங்களாக வீட்டுப் புருஷனாக இருக்கிறேன். இன்று வரை ஒரு கீரைக் கட்டை சரியாகப் பார்த்து வாங்கத் தெரிந்ததில்லை. இத்தனைக்கும் பேலியோவில் இருப்பவன் என்பதால் கீரை என்னுடைய மிக முக்கியமான உணவும்கூட. ஒவ்வொரு முறை கீரை வாங்கச் செல்லும்போதும் எனக்கு இரண்டு பிரச்னைகள் வரும். 1. எது எந்தக் கீரை? 2. இந்தக் கீரை நன்றாக இருக்கிறதா இல்லையா? நினைவு தெரிந்த நாளாக உட்கொள்ளும் உணவுதான். ஆனால் எது...
திண்டுமலாரி
யாராவது சோம்பிக் கிடந்தால் என் பாட்டி ஒரு வசைச் சொல்லைப் பயன்படுத்துவார். ‘திண்டுமலாரி.’ சிறு வயதில் பலமுறை இதனைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அர்த்தம் தெரியாது. இன்று வரையிலுமே தெரியாது. ஆனால் ஒரு திண்டுமலாரி எப்படி இருப்பான்/ள் என்று இப்போது புரிந்துவிட்டது. டிவியில் ஒரு விளம்பரம் பார்க்கிறேன். காப்பி விளம்பரம். வேலைக்காரம்மாள் போன் செய்கிறாள். ஊரிலிருந்து வந்துவிட்டதாகவும் மறுநாள் காலை...
மால்கள்
சென்னையில் நான் அறிந்த முதல் மால் என்பது மூர் மார்க்கெட். அங்குதான் ஒரு காலத்தில் எல்லாமே கிடைக்கும். தவிர எல்லாம் மலிவாகவும் கிடைக்கும். பயன்படுத்திய பாய், பெட்ஷீட்டுகளைக் கூட மூர் மார்க்கெட்டில் வாங்க முடியும். எப்படிப் பழைய புத்தகங்களை முடியுமோ அப்படி. நவீனத்துவ காலத்தின் முதல் மால் என ஸ்பென்சர் மால் அறிமுகமானபோது ஓரிரு முறை சென்ற நினைவிருக்கிறது. ஆனால் சிறு வயதில் போன மூர் மார்க்கெட் அளவுக்கு...
இந்த வருடம் என்ன செய்தேன்?
கிருமி களவாடிய வருடம் என்றாலும் தனிப்பட்ட முறையில் என்னால் எவ்வளவு செய்ய முடியும் என்று எனக்கே நிரூபித்த வருடம் என்பதால் 2020ஐ நான் மறக்கவே மாட்டேன். வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு சில ஏமாற்றுக்காரர்கள், சில நம்பிக்கை துரோகிகள், சில அயோக்கியர்களை இனம் காட்டியது. எதற்கும் சலனமடைபவன் அல்லன் என்றாலும் எனக்கு இதெல்லாம் புதிது. இயல்பில் அவ்வளவு எளிதாக ஒருவரை நம்ப மாட்டேன். மிகவும் யோசித்துத்தான்...
நாவல் எழுதச் சில குறிப்புகள்
முன் எப்போதோ எழுதி வைத்த குறிப்புகள். என் மதிப்புக்குரிய எழுத்தாளர்கள் நேரில் சொன்னவை அல்லது கடிதம் மூலம் எனக்கு எழுதியவை. இன்று புதிதாக எழுத வரும் யாருக்காவது உதவலாம் என்பதால் வெளியிடுகிறேன். இதில் எதுவும் என் கருத்தல்ல. அனைத்துமே எனக்கு அளிக்கப்பட்டவை. 1. சுட்டிக்காட்டப் புதிதாக ஒரு வாழ்க்கை உன் வசம் இருந்தாலொழிய நாவல் எழுத எண்ணாதே. நாவல் என்பது கதை அல்ல. 2. அத்தியாயம் என்றல்ல; அடுத்த வரியைக்...