இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது.
உஸ்தாத்
தனது இசையின் உருக்கத்தின் மூலம் கேட்பவர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த பிஸ்மில்லா கான் கண்ணிலும் ஒரு சமயம் நீர் வந்தது. அந்தப் பாவம் ஆந்திர அரசைச் சேரும்.
பாடம்
போதி மரத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. சிறப்பெல்லாம் புத்தருக்குரியதே. ஆனால் அவர் தினம் ஒரு மரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்திருந்தால் நிச்சயமாக வேலை கெட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
ஸ்ருதி பாலமுரளி
யூட்யூபில் ஸ்ருதி பாலமுரளி என்ற பெண்ணின் சானலை இப்போதெல்லாம் அடிக்கடி திறக்கிறேன். இவர் யார், இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார் என்று அவரது லிங்க்ட் இன் ப்ரொஃபைல் சொல்கிறது. எங்காவது வேலை பார்ப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால் யூட்யூபில் இவர் காட்டும் முகம் முற்றிலும் வேறு. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றிருக்க...
இறவான் ஒரு பார்வை – கதிரவன் ரத்தினவேல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் வந்தடைவதும் அதை எடுத்து வாசிப்பதற்கான காரணமுமே சுவாரசியமானதொரு தனிக்கதையாக அமையும். கடந்த புத்தக திருவிழாவில் பாரா இறவான் நூலை வெளியிடுகிறார். அங்கு சென்ற பொழுது யதெச்சையாக அவரை சந்திக்க நேர்கிறது(கண்டிப்பாக என்னை பார்த்தது அவர் நினைவிலிருக்காது என நம்புகிறேன்). அவரிடம் இறவான் வாங்கப்போவதாக சொல்கிறேன். புன்னகைத்தபடி விடை கொடுக்கிறார். ஆனால் நான் அங்கு...
இறவான்: ஒரு மதிப்புரை – கோடி
இதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கதை இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் “ஆப்ரஹாம் ஹராரி”யின் இசையுடன் உலாவி கொண்டு இருக்கிறேன். இது...
வித்வான் (கதை)
ஒரு ஊரில் ஒரு ஹரன் பிரசன்னா வசித்து வந்தார். ஒரு கிருமிக் காலத்தில் அவருக்கு இரண்டு மாதக் கட்டாய ஓய்வு தரப்பட்டு வீட்டில் இருக்க வேண்டி வரவே, சாப்பிட்டு சாப்பிட்டு மிகவும் குண்டாகிப் போனார். (அதற்கு முன்னர் அவர் ஒல்லியாக இருந்தவர் என்பதால் இது வேறு எந்த ஹரன் பிரசன்னாவும் இல்லை.) குண்டாகிப் போன ஹரன் பிரசன்னாவுக்கு இரண்டு பழக்கங்கள் இருந்தன. எப்போதும் அவர் பைக்கில் வெளியே போவார். மற்றும் பைக்கில்...
உலகை வென்ற இசை
பாடல்கள் பிரமாதம். பின்னணி இசை பிரமாதம். தமிழ் ரசிகர்கள் இதற்குமுன் இப்படியொரு இசையைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நன்றாக இருக்கிறது என்பது இரண்டாவது. இளைஞனே, உன்னுடைய இசை மிகவும் புதிதாக இருக்கிறது. நீ பேசப்படுவாய். சரி, ஆடியோ ரெடியாகிவிட்டது. அட்டை டிசைன் தான் மிச்சம். சொல். ரசிகர்களுக்கு நீ என்ன பெயரில் அறிமுகமாகப் போகிறாய்? மணி ரத்னம் காத்திருந்தார். ரோஜா அவருக்கு ஒரு முக்கியமான படம்...
இந்த வருடம் என்ன செய்தேன்?
* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday. * கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ...
சினிமாவும் நானும்
ஐகாரஸ் பிரகாஷ் கேட்டுக்கொண்டபடி அவர் தொடுத்த வினாக்களும் என் விடைகளும் இங்கே. 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? வயது ஐந்து அல்லது ஆறு இருக்கலாம். கோவூரில் அப்போது குடியிருந்தோம். ஊருக்கே புதிதாக பக்கத்து வீட்டில் டிவி பெட்டி வர, அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் பத்து பைசா வசூலித்துக்கொண்டு பார்க்க அனுமதித்தார்கள். படம் ஆட்டுக்கார...
ஓர் அறிவிப்பு
இந்தத் தளத்தின் வலப்பக்கத்தில் ஒரு புதிய பகுதியை நீங்கள் காணலாம். இனி [கூடியவரை] தினசரி ஒரு நல்ல பாடலை இங்கே வழங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் பேச்சு வடிவிலும்கூட. உரையாடலாகச் சில விஷயங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. யாருடனாவது உரையாடி, தொகுத்து வழங்கும் திட்டம். எல்லாம் என்னுடைய தொழில்நுட்ப [அஞ்]ஞானம் எத்தனை கைகொடுக்கிறது என்பதைப் பொறுத்தது. இன்னும் ஆடியோ...
நாக்கமுக்க : மண்ணிசையின் மரண ஓலம்
சுப்ரமணியபுரம் படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடலுக்குப் பிறகு நான் தினசரி கேட்கிற பாடலாகியிருக்கிறது நாக்கமுக்க. பொதுவாகக் குத்துப்பாடல் ரசிக்கிறவனில்லை நான். தாளத்தைவிட இசையில்தான் நாட்டம் அதிகம். அந்த வகையில் என் தலைமுறை இசையமைப்பாளர்களில் எனக்கு ரெஹ்மானைவிட கார்த்திக் ராஜா மிக நெருக்கமானவர். வித்யாசாகர், பரத்வாஜ் இருவரும்கூட என்னைக் கவர்ந்த சில பாடல்களைத் தந்தவர்கள் என்றாலும் அவ்வப்போது அவர்கள்...
வரான் வரான் பூச்சாண்டி
varaan_varaan_boochandi சமீபத்தில் இந்தப் பாடல் அடிக்கடி என் காதில் விழுகிறது. அடிக்கடி முணுமுணுக்கிறேன். பேருந்தில் ஒருமுறை அருகிலிருந்தவரின் மொபைலில் ரிங் டோனாக ஒலித்து வியப்பூட்டியது. எந்தப் படத்தில் என்று பலரிடம் கேட்டுப்பார்த்தும் பதிலில்லை. யார் இசையமைத்தது என்று தெரியவில்லை. பாடியவர் குரலும் பரிச்சயமில்லாதிருக்கிறது. ஆனால் சுண்டியிழுக்கிறது. வீட்டில் என் குழந்தை விரும்பிக் கேட்கிறது. மற்ற...
பாதி வித்வான்
[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் – வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட் கட்டுரை கல்கியில் வெளியானது...
இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்
சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது. அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார். ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை. இருவரின் நோக்கமும் என்னவாக இருந்தாலும்...
பூங்குலலி
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனிப்பது அங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை. சுகமான ராகம், இசைக்குயில், மெல்லிசை மேகங்கள், இளராகங்கள் என்கிற பெயரில் எட்டுக்கு நாலு அளவில் பேனர் கட்டி ஒரு டிரம் செட், ஒரு யாமஹா கீபோர்ட், ஒரு செட் தபேலா, ஒரு ஜால்ரா, ஒரு கிடார் மற்றும் இரண்டு மைக்குகளுடன் எப்போதும் செக், செக் செக் என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் கனவுகள் என்னவாக...
காதலின் இசை
அவன் அப்போது பிரபலமில்லை. உள்ளூரில் மட்டும் ஒரு சிலருக்கு அவனுடைய இசையின் அருமை தெரியும். என்றைக்காவது எதையாவது சாதிக்கக்கூடியவன். இன்றைக்குச் செய்யும் இம்சைகளை அதனால் பொறுத்துக்கொள்வோம். நள்ளிரவு தொலைபேசியில் அழைத்து பாடிக்காட்டுகிறாயா? சரி, பாடு. கஞ்சா குடித்துவிட்டு சுய சோகத்தில் புலம்பி வேலையைக் கெடுக்கிறாயா? செய். பணப்பிரச்னை. அது எப்போதுமிருக்கிறது. இந்தா, என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவே...
தமிழே, தப்பிச்சுக்கோ!
நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன். அவரது தொடக்ககாலப் பாடல்கள் முதல் நேற்றைக்கு வெளியானதுவரை அநேகமாக எதையும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன். தியானமாகக் கொள்ளத்தக்க இசை வடிவங்களை வழங்கிய சில இசை வல்லுநர்களுள் அவர் ஒருவர். சுயம்பு, குழம்பு என்றெல்லாம் என்னால் சிலிர்க்கமுடியாது. கண்டிப்பாக மூழ்கி எடுக்கவேண்டிய முத்தைத்தான் அவர் எடுத்திருக்கிறார். கடும் பயிற்சியும் சிந்தனை ஒழுக்கமும்...


