பால கணேஷ் என் நண்பர் என்பது இந்தப் பக்கத்தைப் பின் தொடரும் அத்தனை பேருக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கும். உடனடி நகைச்சுவைக்கு, சீண்டலுக்கு, கிண்டலுக்கு, உதாரணத்துக்கு – யோசிக்காமல், போன் செய்து ஒப்புதல் கேட்காமல் நம்மால் யார் பெயரைப் பயன்படுத்த முடியுமோ, அவரைத்தான் நண்பர் என்று சொல்ல முடியும். அவர் எனக்கு அந்த ரகம். பெரிய படிப்பாளி. நல்ல, வெகுஜன நகைச்சுவை எழுத்தாளர். கொஞ்சம் தீவிரம்...
அறுக்கமாட்டாதவன்
எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...
பார்த்தால் தீருமா பசி?
எனக்கு சமைக்கத்தான் வராதே தவிர, சாப்பிடும் கலையில் சந்தேகமின்றி வாகை சூடியவன். குவாலிடி கண்ட்ரோல் என்றொரு பணி இனத்தையே எவனோ என்னை ஒளிந்திருந்து பார்த்துத்தான் உருவாக்கியிருக்கிறான் என்ற ஐயம் எனக்குண்டு. சாதாரண சாம்பார், ரசமானாலும் ருசியில் அரை சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால் அந்தராத்மா அலாரம் அடித்துவிடும். இது வெறும் உப்பு-காரம் குறைபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு ரசப்பாத்திரத்தைத் திறந்தால்...
பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?
பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின்...
அன்சைஸ் – மறு பதிப்பு
இந்த உலகில் ஆகச் சிரமமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுய விமரிசனம் செய்துகொள்வதுதான். ஆனால், பெரும்பாலும் நமக்கு ரொம்பப் பிடித்த நபர் நாமேவாகத்தான் இருப்போம். பிடித்துவிட்டால் விமரிசனம் எங்கிருந்து வரும்? ஆனால் ஓர் எழுத்தாளன், விமரிசனக் கலை பயில விரும்பினால் அதற்கு மிகவும் சௌகரியமான, பாதுகாப்பான வழி தன்னைத்தானே விமரிசித்துக்கொள்வது. ஒரு பயலும் நாயே பேயே என்று நாலு பக்கத்துக்குத் திட்ட...
கொடுங்கனவு
இரவு ஒரு கொடுங்கனவு. கொங்கு நாடு உதயமாகிவிடுகிறது. வலிமை அப்டேட் வானதி சீனிவாசனுக்கு லெஃப்டினண்ட் கவர்னர் காயத்ரி ரகுராம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போகிற நேரம், ‘நிறுத்துங்கள்!’ என்று கூவிக்கொண்டு ராஜகுரு ஜக்கி வாசுதேவ் உருவிய வாளுடன் அரண்மனைக்குள் நுழைகிறார். கடலுக்குள் மூழ்கிய துவாரகையை மீட்டு வெளியே கொண்டு வந்து, கடல் இல்லாத பாதுகாப்புப் பிராந்தியமான கொங்கு நாட்டில் மறு...
நான் மில்லியனர் ஆகப் போகிறேன்.
அன்பின் மூசா முகமது, உங்கள் அஞ்சலுக்கு நன்றி. சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவன டைரக்டரிக்கு என் மின்னஞ்சல் எப்படிச் சென்றது என்று தெரியவில்லை. பாருங்கள், நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கார் என்பது எனக்கே தெரியாதிருக்கிறது. அது நிற்க. இருபத்திரண்டு மில்லியனில் நாற்பத்தைந்து சதமானப் பங்கு என்பது பெரிய தொகை மட்டுமல்ல. உங்கள் பரந்த உள்ளத்தையும் காட்டுகின்றது. இந்தப் பணம் எனக்குக் கிடைத்துவிடும் பட்சத்தில்...