கடந்த ஒரு வாரமாகக் கதறக் கதறக் கலைச் சேவை. நான் ஆறு சீரியல்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியிருக்கிறேன். அப்போதுகூட இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. புத்தகக் காட்சிக்குக் கூட இன்று போகலாம்; அடுத்த மூன்று நாள்களுக்கு முடியாது; வெள்ளிக் கிழமை போகலாம்; அதன் பிறகு முடியாது என்று கணக்குப் போட்டு வாழ வேண்டிய அளவுக்கு பணி நெருக்கடி. வீட்டுக்கே இரண்டு நாள்களுக்கொரு முறை போகும் கொடூரமெல்லாம் நடக்கிறது. சிறிது...
ரஜினி: நடிகரும் தலைவரும்
என் நண்பர்களில் சிலர் தீவிரமான ரஜினி ரசிகர்கள். அவரைத் தலைவர் என்று குறிப்பிடுபவர்கள். பன்னெடுங்காலமாக அவர் அரசியலுக்கு வருவார், வருவார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு முறை ரஜினி கூட்டம் கூட்டி விரைவில் முடிவெடுப்பேன் என்று சொல்லும்போதும் என்னமோ திட்டமிருக்கு என்று சொல்வார்கள். கேலி கிண்டல்களை விலக்கி, இம்மனநிலையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். ரஜினி ஒரு நடிகர் என்பதைவிட, ஸ்டைல் மூலமாக...
ஆர்குட்டில் என் வாசகர் குழுமம்
ஆர்குட்டில் எனக்கொரு வாசகர் குழுமம் தொடங்கப்பட்டிருப்பதை நேற்று கண்டேன். பொதுவாக எனக்கு ஆர்குட் என்றால் அலர்ஜி. முன்பொரு சமயம் நண்பர்கள் அறிமுகப்படுத்தியபோது உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். பெரிதாக ஆர்வம் கவரவில்லை. வெளியேறி விட்டேன். பின்பு என்னுடைய ஜிமெயில் முகவரி களவு போன சமயம், ஒரு போலி ஆர்குட் முகவரியை நான் க்ளிக் செய்து உள்ளே சென்று கடவுச்சொல் கொடுத்ததுதான் காரணம் என்று நண்பர் இட்லிவடை...