வலை எழுத்து

சலம் – எடிட்டிங் அப்டேட்

என் பதிப்பாளர் இரண்டு முறை அழைத்து, எப்போது முடியும் என்று கேட்டுவிட்டார். என்னைக் கேட்காதீர்கள், என் கழுத்தைக் கேளுங்கள் என்றா சொல்ல முடியும்?

சரியான தொடக்கம் – வினுலா

இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் தான் ஆசிரியர் பா ராகவன் அவர்களது குரலை முதல் முறையாகக் கேட்டேன். புத்தகங்கள் வழியாக அரசியலைப் புரிய வைத்தவர், அன்று எழுத்து எனும் தீவிர அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

கழுத்து வலி மாத்திரை ரூ. 12,500

எழுத்தாளர்களின் தலையாய பிரச்னைகளுள் முதன்மையானது, கழுத்து வலி. பண்டைக்காலத் தமிழ் சினிமா மணப்பெண்களைப் போலப் பெரும்பாலான நேரங்களில் குனிந்த தலை நிமிராமல் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதால் இது வருகிறது.

பிப்ரவரி 8 – எழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

எதிர்வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் எழுத்துப் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்குகிறேன். எழுத்தார்வமும் கற்கும் ஆர்வமும் உள்ள புதியவர்கள் வரலாம்.

அபத்தங்களின் அபிநயம் – சி. சரவணகார்த்திகேயன்

துறைசார் அனுபவங்களில் புனைவேற்றி நாவல் எழுதும் வழக்கம் உலக இலக்கியத்தில் ஏற்கெனவே உண்டுதான். தமிழிலும் விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல துறை சார்ந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘ஜந்து’ நாவல் அவ்வகைமையில் முக்கியமான உதாரணமாக நிற்கும். நானறிந்து பாராவுக்கு நான்கு துறைகளில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஒன்று பத்திரிகை, அடுத்து பதிப்பகம், அப்புறம் தொலைக்காட்சி நெடுந்தொடர், சமீப காலமாக...

ஜென் கொலை வழக்கு – புதிய புத்தகம்

நுண் கதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகள் என்று பலவாறாக இன்றைக்குக்குறிப்பிடப்படும் மிகச் சிறிய கதை வடிவங்களின் தொடக்கம் ஜென் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள், ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் இயற்றப்பட்ட காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது. இந்த ஜென் கொலை வழக்கு என்னும் நவீன நாசகார ஜென் கதைகள், ஜென்கதை வடிவத்தைப் புறத் தோற்றமாகக் கொண்டு எழுதப்பட்ட நுண் கதைகளே. மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல்...

ஜந்து – புதிய நாவல்

பத்திரிகை உலகம் – பத்திரிகையாளர்களின்  வீர சாகசங்கள் அல்லது துயர வாழ்க்கை  சார்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வார இதழ் உலகையே  கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல் ஜந்துதான். ஆனால் இந்நாவலின் தனித்துவம் அதுவல்ல. இதன் களம் ஒரு தமிழ்ப் பத்திரிகை அலுவலகமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், இது பேசும் உண்மைகள் உலகப் பொதுவானவை...

இரண்டல்ல

எண்ணெய் எடுக்கிறார்கள் எரிவாயு எடுக்கிறார்கள் கனிமங்கள் தனிமங்கள் சேர்மங்கள் ஏராளமாக எடுக்கிறார்கள் பார் பார் நீருக்கடியில் தடம் விரித்து புல்லட் ரயில் விடுகிறார்கள் உற்றுப் பார் உவர் நீரை நன்நீராக மாற்றிக் குடிக்கக் கொடுக்கும் திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது நம் மாநிலத்திலேயே. ஒன்றுமில்லாவிட்டாலும் அள்ளிக்கொள்ள எப்போதும் உள்ளது உப்பும் மீன்களும் முத்தும். எடுக்கப் போனால் எதையாவது கொடுப்பது...

சாலைக் கவிதை

எல்லா சாலைகளிலும் ஏதோ பணி நடக்கிறது எல்லா சாலைகளையும் ஒருவழி ஆக்கியிருக்கிறார்கள் எல்லா சாலைகளிலும் பாதி தொலைவில் பாதை மாற்றி விடுகிறார்கள் போக வேண்டிய இடத்துக்கு நேரெதிர் திசையில் நெடுந்தூரம் சுற்றிக்காட்டிவிட்டு எல்லா சாலைகளும் எங்காவது கொண்டு சேர்த்துவிடுகின்றன முடிவற்ற பெருஞ்சுவராக நீளும் நீலத் தகடுகள் எல்லா சாலைகளையும் இரண்டாகப் பிளக்கின்றன தகடுக்கு மறுபுறம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!