அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியது. பத்தாம் தேதி முதல் இந்து தமிழ் திசையில் கணை ஏவு காலம் எழுதத் தொடங்கினேன். ஆரம்பிப்பதற்கு முன்னரே இது போரைக் குறித்த கட்டுரைகளல்ல என்று தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தேன். இறைத்தூதர் மோசஸ் காலத்துக் கதைகளில் தொடங்கி யாசிர் அர்ஃபாத்தின் மறைவுக் காலம் வரை நீண்டு நிறைந்த நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாவது பாகத்தைத்தான் இப்போது...
இனிப்பில் வாழ்தல்
எனக்கு இனிப்புப் பலகாரங்கள் மிகவும் பிடிக்கும். ஒரு பேப்பரில் ஸ்வீட் என்று எழுதிக் காட்டினால்கூட எடுத்து மென்றுவிடுவேன் என்று என் மனைவி சொல்வார். அவ்வளவெல்லாம் மோசமில்லை என்று ஒவ்வொரு முறையும் சொல்லத் தோன்றும். உண்மைகளை மறுக்கலாமே தவிர அழிக்க முடியாது அல்லவா? எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் வேறு யாரும் அப்படிக் கிடையாது. எல்லோரும் சாப்பிடுகிற அளவுதான் சாப்பிடுவார்கள். எனக்கு ஏன் ஸ்வீட்...
போஸ்டர்
சக்தி ஜோதி என்ற சகோதரி நேற்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார். நிலக்கோட்டையில் இருந்து ஐயம்பாளையம் வரை இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகச் சொன்னார். மதுரையில் வசிக்கும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர், நண்பர் மதுசூதனன் நிலக்கோட்டையிலேயே வசிக்கும் அவரது நண்பரைத் தொடர்புகொண்டு மேலும் சில படங்களும் ஒரு விடியோவும் எடுத்து அனுப்பியிருந்தார். எழுதுபவனைத் தவிர வேறு யாருக்கும் இந்த முகமறியா அன்பெல்லாம்...
பெய்வினைத்தொகை
பாயசத்தில் அப்பளம், சாம்பார் சாதத்துக்கு வெல்லம், காப்பியில் ஓமப்பொடி என்று மாறுபட்ட ருசி விரும்பும் நண்பர்கள் பலர் எனக்குண்டு. எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி தயிர் சாதத்துக்கு நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவாள். எனக்கே இம்மாதிரியான சில ஏடாகூடப் பழக்கங்கள் உண்டு. அது இருக்கட்டும். தோசைக்கு ஊறுகாய் தொட்டுச் சாப்பிடுவோர் யாரையாவது தெரியுமா? பாரதியார் அப்படித்தான் சாப்பிடுவார் என்று அவரது மனைவி...
துறப்பதும் ஏற்பதும்
உணவு குறித்தோ, நொறுக்குத் தீனிகள் குறித்தோ எப்போது நான் என்ன எழுதினாலும் உடனே, ‘பேலியோ அவ்வளவுதானா?’ என்று யாராவது ஓரிருவராவது கமெண்ட் போட்டுவிடுகிறார்கள். அது ஏதோ கோயிலுக்கு நேர்ந்துகொண்டு மொட்டை போடுவது போல இங்கே நடக்கிறது. இதுவரை அத்தகு கமெண்ட்களுக்கு நான் பதில் சொன்னதில்லை. ஐந்தாண்டுக் காலம் நான் பேலியோவில் இருந்தேன். 28 கிலோ எடை குறைத்தேன். 6.7 அளவில் இருந்த சர்க்கரையை 5.4க்குக் கொண்டு...
நடந்த கதை
காலை கண் விழித்து எழுந்த சில நிமிடங்களிலேயே ஹலோ எஃப்.எம்மில் சிவல்புரி சிங்காரம் சொன்னார். அன்பின் ரிஷப ராசியினரே! இன்று நீங்கள் வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டும். என்றால், முழு நாளும் மொக்கை வாங்குவீர் என்று பொருள். அவர் சொல்லும் நல்லவையெல்லாம் நடக்கிறதோ இல்லையோ. இம்மாதிரியான ஆரூடங்கள் உடனடியாக பலித்துவிடுகின்றன. நேற்று இரண்டு முக்கியமான வேலைகள். காலை ஒன்று; மாலை ஒன்று. விடிந்ததுமே...
கிறுக்குத்தனம்: 2004 வர்ஷன்
பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளைச் சில மாதங்களாக டெலிட் செய்து வருகிறேன். என்ன ஒரு ஐந்து பத்து ஐடி இருக்குமா, இது ஒரு ப்ராஜக்டா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஜிமெயில் அறிமுகமான காலத்தில் அதன் 15 ஜிபி இடம் என்பது ஒரு பயங்கரமான போதைப் பொருளைப் போல என்னைத் தாக்கியது. எப்படியாவது ஒரு பத்தாயிரம் ஜிபியை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று வெறிகொண்டு என்னென்னவோ பெயர்களில் அக்கவுண்ட்...
என்றாவது ஒரு நாள்
வீடு வெதுவெதுப்பாக்கும் விழாக்கள்கூட முக்கியமில்லை. வீட்டைச் சுற்றிக்காட்டும் வீடியோ கலாசாரம் ஒன்று சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நகரியில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டு விடியோ ஒன்றைப் பார்த்தேன். நேற்று என் அட்மின் இத்தகு விடியோக்கள் இன்னும் இரண்டினைச் சுட்டிக்காட்டினார். முதலாவது, தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் வீட்டுச் சுற்றுலா. அவரது மகள் தயாரித்தது. மற்றது, பாண்டியன் ஸ்டோர் மீனா...
33 நாயன்மார்கள்
நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் காலனி மெயின் ரோடில் பன்னிரண்டு பேர். பிறருக்குக் குறிப்பிட்ட இருப்பிடம் கிடையாது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பவர்கள். பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் வாகனதாரிகளாக வேண்டும், யாரும் கால்நடையாக எங்கும் சென்று...
குளிர்
பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது. எனவே ஃபேனை அணைத்துவிட்டு எழுதுவேன். எழுதாமல், யோசிக்கும்போது ஃபேன் போட்டுக்கொள்வேன். அதாவது குளிர்ச்சி, சூடு என்பது பொருட்டல்ல. சத்தம், சத்தமின்மையே பேசுபொருள். இப்படித்தான் சென்ற ஆண்டு வரை வாழ்ந்து வந்தேன். என்ன காரணமோ...
தனி
மிகவும் உள்ளடங்கிப் போய்க்கொண்டே இருக்கிறேன். சக மனிதர்களிடமிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டுவிடும் வேட்கை என்னையறியாமல் ஆட்கொண்டிருக்கிறது. எவ்வளவு காலமாக இது, ஏன் இது என்பதற்கான காரணம் தெரியும். ஆனாலும் என் இயல்புக்கு எதிரானதொரு பாதையில் தெரிந்தே நடந்துகொண்டிருக்கிறேன். இதை விரும்பிச் செய்கிறேனா என்று தெரியாது. ஆனால் செய்கிறேன். அதில் சந்தேகமில்லை. தற்செயலாக நேற்று என் மொபைல் போனில் யார்...
மெட்ராஸ் பேப்பர்
தொலைக்காட்சிக்கு எழுதுவதை நிறுத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்நாள்களில் நான் என்ன செய்கிறேன் என்று கேட்காத நண்பர்களே கிடையாது. எதையாவது செய்துகொண்டிருப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோருக்கும் இருந்தது. அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தாலும் அது உருத் திரண்டு ஒரு வடிவம் கொண்டு வெளிப்பட இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது. நண்பர்களே, உங்கள் வாழ்த்தோடு ஒரு புதிய பத்திரிகை தொடங்குகிறேன்...
உன் மீது ஒரு புகார்
தன்னுடன் படித்த நண்பர்களில் பலர் புத்தக சகவாசமே இல்லாதிருப்பது குறித்து நண்பர் மகுடேசுவரன் எழுதிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் படித்தேன். நியாயமாக அவர் தம் நண்பர்களுக்க நன்றி சொல்ல வேண்டும். நேற்று ஒரு சம்பவம் நடந்தது. இரவு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தது ஒரு பெண். எடுத்த எடுப்பில், ‘நீங்க பா. ராகவன்ங்களா? நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம்...
காதலற்றவன்
இன்றெல்லாம் ஏராளமான காதல் குறிப்புகள், கவிதைகள், நினைவுச் சிதறல்கள் என்று சமூக வெளி எங்கும் ஊதுபத்திப் புகை போலக் காதல் மிதந்து ஊர்ந்துகொண்டே இருந்தது. தனக்கு வரும் மர்மப் பரிசுகளை மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். தனக்கு யாரும் முத்தம் தரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால் மைலாப்பூர் ஜன்னல் கடையில் உருளைக் கிழங்கு பஜ்ஜி...
இறவான் – ஒலிப் புத்தகம்
இறவான் ஒலிப் புத்தகம் இன்று ஸ்டோரி டெல்லில் வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் கேட்டுப் பார்த்து உங்கள் கருத்துகளை எழுத வேண்டுகிறேன். தொடர்ந்து என்னுடைய பல புத்தகங்கள் ஸ்டோரி டெல்லில் ஒலி நூல்களாக வர இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறவான் ஒலிப் புத்தகத்தைக் கேட்டு ரசிக்க இங்கே செல்லவும்.
மறதி
என்னுடைய நினைவுத் திறன் மிக அதிகம். மிகச் சிறிய வயதுகளில் நடந்த சிறிய சம்பவங்கள்கூட நினைவிருக்கின்றன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி நாள்களில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சிகள், அச்சந்தர்ப்பங்களில் நான் அணிந்திருந்த உடைகளின் நிறம் வரை இன்னும் மறக்கவில்லை. ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மனனம் செய்த பாடப் பகுதிகள், செய்யுள்கள் அனைத்தும் நினைவில் இருக்கின்றன. கேளம்பாக்கம் அரசினர்...
வகுப்பு அனுபவம்
சமீப காலமாக என்னுடைய வகுப்புகளைக் குறித்து விசாரிக்கும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் ஒன்றைக் கேட்கிறார்கள். ‘இரண்டு மணி நேரம் உங்களால் தடையின்றிப் பேச முடிகிறதா?’ இவர்கள் அனைவரும் என் இயல்புகளை மிக நன்றாக அறிந்தவர்கள். குறிப்பாக மைக் முன்னால் பேசுவதில் எனக்குள்ள தயக்கங்களையும் அப்போது ஏற்படும் தடுமாற்றங்களையும் கண்டு களித்தவர்கள். சிறு வயதில் பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு...
க்ளப்கள்
பேராச்சி கண்ணன் எழுதிய தல புராணம் என்ற புத்தகத்தைப் படிக்க எடுத்தேன். மிகவும் சுவாரசியமாகப் போகிறது. அதில் அடையாறு க்ளப் குறித்த கட்டுரையைப் படித்தபோது சென்னை நகரத்தில் உள்ள க்ளப்கள் சில நினைவுக்கு வந்தன. சென்னையில் சில க்ளப்கள் இருக்கின்றன. தி. நகர் க்ளப், எஸ்.வி.எஸ் க்ளப், காஸ்மோபாலிடன் க்ளப், ரேஸ் கோர்ஸ் க்ளப் என்பது போல. போரூர் போகிற வழியில் லெ மிக்கல் என்றொரு க்ளப் இருக்கிறது. நான் கிண்டி...
புத்தாண்டுத் தீர்மானங்கள்
பொதுவாக நிறையப் பேர் செய்வதும், பெரும்பாலும் யாரும் கடைப்பிடிக்க முடியாமல் கைவிடுவதுமாக ஒவ்வோர் ஆண்டும் நகைப்புக்கு இடமாவது, புத்தாண்டுத் தீர்மானங்கள். தீர்மானங்களைச் செயல்படுத்த முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா, இல்லையா என்கிற தெளிவின்மையே. ஆரம்பித்துவிடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையிலேயே பல தீர்மானங்களைச்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 50)
கபடவேடதாரியின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துவிட்டோம். கோவிந்தசாமி முதன் முறையாகத் தனது அறிவை பயன்படுத்தி செயல்படுவதை பார்க்கிறோம். சூனியன் தான் அனைத்து பாத்திரங்களையும் படைத்திருக்கிறான், அதுவரையில் நமக்கிருந்த குழப்பம் தீர்க்கிறது. ஒரு பக்கம் கோவிந்தசாமி தான் நூற்று முப்பது பெண்களைத் திருமணம் செய்யப் போவதாகவும், மேலும் சாகரிகாவை விர்ச்சுவல் விவாகரத்து செய்யப் போவதாகவும் அறிவிக்கிறான்...


