ArchiveApril 2008

Fitna: ஓர் எதிர்வினை

அன்புள்ள பா.ரா, மேற்படி பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் – // பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. // தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே...

மீட்டர் போட்ட ஆட்டோ

  விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம். ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன். ‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது. ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப்...

கி.ரா.

சரியாக எட்டு வருடங்கள் ஆகின்றன, நான் அவரைச் சந்தித்து. நேற்று நேர்ந்தது. அதே புன்னகை. அதே அன்பான தோள் தட்டல். அதே நலன் விசாரிப்புப் பாணி. அதே ‘அழகிய’ சென்னைத் தமிழ். நல் ஊழ் மட்டுமே நல்ல ஆசிரியர்களை நமக்குக் கொண்டுவந்தளிக்கும். கி.ரா. என்கிற கி. ராஜேந்திரன் எனக்கு அம்மாதிரி. கார்ட்டூனிஸ்ட் மதியின் ‘அடடே’ புத்தக வெளியீட்டுக்கு அவரை அழைத்திருந்தோம். தம் மகளும் தற்போதைய கல்கி ஆசிரியருமான...

காத்திருந்த காலம்

சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன். 1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு  அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தேன். 2. மருத்துவமனைக்கு வரும்...

நவீனத்துவத்தின் முகம்

நவீன இலக்கியம் என்றால் என்ன என்று நேற்று பின்னூட்டப் பெரியவர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அகராதி வைத்துப் படிக்க வேண்டியவையெல்லாம் பழைய இலக்கியம், அகராதி துணையின்றிப் படிக்க முடிகிறவை நவீன இலக்கியம் என்று சொல்லிவிடலாமா என்று அவரே தமது முடிவையும் இங்கே முன்வைத்திருந்தார். இம்மாதிரி விவகாரங்களில் பொதுவாக நான் கருத்து சொல்லுவதில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தீவிரவாதி மனநிலை கொண்ட வாசகன்...

சோலையில் சஞ்சீவனம்

இன்றைய மதிய உணவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘சோலையில் சஞ்சீவனம்’ என்னும் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உணவகத்தில் அமைந்தது. அலுவலக நண்பர்களுடன் உணவகத்தினுள் நுழைந்தபோது தோன்றிய எண்ணம் : புத்தருக்கு போதி மரம். நம்மாழ்வாருக்குப் புளியமரம். நமக்கு சஞ்சீவனம். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் இதே உணவகத்தில் சாப்பிட நேர்ந்தபோதுதான் உடல் நலம் குறித்தும் டயட் குறித்தும் முதல் விழிப்புணர்வு உண்டானது...

Fitna – தேவையற்ற அச்சுறுத்தல்

குமுதம் ரிப்போர்ட்டரில் கடந்த 198 இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் என்னுடைய ‘மாயவலை’ தொடரின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், நெதர்லந்த் அரசியல்வாதி கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) ஃபித்னா (Fitna) என்னும் குறும்படத்தைக் காண நேர்ந்தது. பரம சுதந்தர மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்ற நெதர்லந்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரிக்கத்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me