ArchiveJuly 2008

இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்

சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது. அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார். ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை. இருவரின் நோக்கமும் என்னவாக இருந்தாலும்...

மெல்லினம் – சில குறிப்புகள்

நேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து...

பல்லே பல்லே…

நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும். பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி போல ரொட்டிகளைச் சுட்டுப் போட்டுக்கொண்டே...

முதுமையின் மற்றொரு நோய்

ஆசை யாரை விட்டது? கலைஞருக்கு நோபல் பரிசு வேண்டியிருக்கிறது. பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் இதற்காகப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு. குழுவில் கலைஞரின் பேத்தி கயல்விழியும் ஒருவர். மிகச் சமீபத்தில் மேடைக்கு வந்தவர் இந்தப் பேத்தி. தவிர சில கல்வியாளர்கள், கவிஞர்கள், ஒரு கவிப்பேரரசர். இந்தப் பன்னிரண்டு பேரும் கலைஞரின் எழுத்தோவியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு...

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008

* நெய்வேலி புத்தகக் கண்காட்சி [பொதுவாகவே எந்த ஊர் புத்தகக் கண்காட்சியும் வெள்ளிக்கிழமைகளில்தான் தொடங்கும். ஒரு சனி, ஞாயிறை முழுமையாகப் பயன்படுத்த அது ஒரு சௌகரியம்] ஒரு மாறுதலுக்கு இம்முறை சனிக்கிழமை மாலை தொடங்கியது. வண்ணமயமான வரவேற்பு வளைவு, அபாரமான அரங்க ஏற்பாடுகள், பிரமிப்பூட்டிய டாய்லெட் வசதி. என்.எல்.சி. மெனக்கெடுகிறது. * பல சீனியர் பதிப்பகங்கள் இம்முறை கலந்துகொள்ளவில்லை. ஆனால் ப்ராக்ஸி...

புலி[க்குட்டி] வருது

ஆம். கிழக்கில் இருந்தல்ல. Prodigy சார்பாக எங்களுடைய முதல் பத்திரிகையை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை [06.07.2008] நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எங்களுடைய Prodigy ‘மேதை’ வெளியிடப்படுகிறது. இது ஒரு மாதப் பத்திரிகை. குழந்தைகள்-சிறுவர்கள்-இளைஞர்களின் பொது அறிவுக்கு விருந்தளிக்கும் இதழாக வெளிவரப்போகிறது.  ஐந்து ரூபாய் விலை. ‘ப்ராடிஜி புக் க்ளப்’ என்று...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி