ArchiveNovember 2011

விபரீதம் – 2

கீழ்க்கண்ட சாஹித்தியத்தை நேற்று முன் தினம் இரவு இதே நேரம் எழுதினேன். இன்று சன் டிவியில் உதிரிப்பூக்கள் சீரியலுக்கான ட்ரெய்லரில் இது வருகிறது. தொன்மமும் பின்னவீனமும் சந்தமும் சொந்தமும் சங்கமிக்கும் இந்த ராப்பிலக்கியப் படைப்பினைத் தமிழ்கூறும் நல்லுலகின்முன் சமர்ப்பிப்பதில் சொல்லொணா ஆனந்தமடைகிறேன். [யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தனிமடலில் தெரிவிக்கவும்.]

மழையும் மற்றதும்

கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் நான் இதற்குமுன் பார்த்திராத பல பகுதிகளுக்கு, படப்பிடிப்பு நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சில இடங்கள் சென்னைக்குச் சற்று வெளியேயும் இருந்தன. எப்படி ஆனாலும் அதிகபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரத் தொலைவுக்குள் இருந்த இடங்கள். ஒரு சுமாரான மழைக்கு நகரம் எத்தனை நாசமாகிவிடுகிறது என்பதை இந்தப் பயணங்களின்போது கண்கூடாகப் பார்த்தேன். குறிப்பாக, போரூர்...

பதிலளிக்கும் நேரம்

கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.
இது பதிலளிக்கும் நேரம்.

நாளை ரிலீஸ்

நான் வசனம் எழுதியிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
தொடர்புடைய முந்தைய குறிப்புகள்: ஒன்று | இரண்டு
படம் பார்க்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி