சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...
வலி உணரும் நேரம்
எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.
மெல்லினம் – சில குறிப்புகள்
நேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து...
பல்லே பல்லே…
நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும். பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி போல ரொட்டிகளைச் சுட்டுப் போட்டுக்கொண்டே...
நடந்த கதை
நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது. சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக – எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது முடியாதிருந்தது. நேற்றைக்குத் திட்டமிட்டு...
மாமி மெஸ்
நாராயணனின் இந்தக் கட்டுரையின் கடைசி வரிக்கு நன்றி. கூகுள் சாட்டில் வழி சொன்ன விதத்தில் சற்று கோயிந்தசாமித்தனம் இருப்பினும், வேகாத மதிய வெயிலில் டிடிகே சாலையின் இப்புறமும் அப்புறமுமாக நடந்து களைத்தாலும் ஒருவழியாக அந்த மெஸ்ஸைக் கண்டுபிடித்துவிட்டேன். சிவசாய் மெஸ். டிடிகே சாலையில் நாரதகான சபாவுக்கு எதிரே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் நா.கா. சபாவுக்கு எதிர்சாரியில் ஒரு சிறு சந்தில் இருக்கிறது. சந்து...
பிறந்த ஊர்
சோமங்கலம் என்கிற ஊரைப் பற்றி சிறு வயதிலிருந்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை, பார்த்ததில்லை, அதற்கான சந்தர்ப்பங்கள் ஏதும் நேர்ந்ததில்லை. அந்த ஊரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நான் பிறந்தேன் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். சென்னை தாம்பரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிற கிராமம் போன்ற ஊர். பிறந்த ஊர் என்று பெருமிதம் கொள்ள...
மீட்டர் போட்ட ஆட்டோ
விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம். ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன். ‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது. ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப்...
காத்திருந்த காலம்
சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன். 1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தேன். 2. மருத்துவமனைக்கு வரும்...
தீராப் பிரச்னைகள் [தொடர்ச்சி]
6. நான் இலக்கியவாதி இல்லை. குறிப்பாக, தமிழ் இலக்கியவாதி இல்லவே இல்லை. எழுதுபவன். அவ்வளவே. ஆனால் என் கனவுகளில் பெரும்பாலும் இலக்கிய அடிதடிக் காட்சிகள் மட்டுமே வருகின்றன. இத்தனைக்கும் நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதே இல்லை. பக்கத்தில் எங்காவது நவீன இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று தெரிந்தால் இருபத்தைந்து ரூபாய் ஏசி பஸ் பிடித்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடிப்போய்விடுவேன். இது...
தீராப் பிரச்னைகள்
இந்தக் கட்டுரையில் இடம்பெறும் விஷயத்தைப் பற்றி நீங்கள் இரண்டுவிதமாக நினைக்கலாம். * இம்மாதிரியெல்லாமும் பிரச்னைகள் சாத்தியமா? * சே. இதெல்லாம் ஒரு பிரச்னையா? வெறுமனே புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிடுவீர்களானால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தின் பதினோரு பிரச்னைகள். என் வாழ்வில் நான் மிக அதிகம் அவதிப்படுவது இந்தப் பிரச்னைகளால்தான்...
இருபத்தைந்து தோழர்கள்
இது ஒரு பிரச்னை. என்னளவில் சற்றே முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையும் கூட. என் வீட்டுக்கும் பேட்டையின் பிரதான சாலைக்கும் இடையே தோராயமாக முன்னூறு மீட்டர் இடைவெளி இருக்கும். இந்த முன்னூறு மீட்டர் தொலைவைக் கடப்பதற்குள் குறைந்தது இருபத்தைந்து நாய்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் வேண்டியிருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக ஒரே பகுதியில் வசிப்பவர்கள், ஒரே சாலையைப் பயன்படுத்துபவர்கள் என்கிற வகையில் தோழமை உணர்வு...
ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர்
இதே மார்ச். இதே 11ம் தேதி. சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் பத்திரிகையாளர் நண்பர் முப்பிடாதியின் உதவியுடன் சிறைச்சாலைக்குச் சென்று அவனைச் சந்தித்தபோது காக்கி அரை நிக்கரும் கைவைத்த பனியனும் நெற்றியில் துலங்கிய திருநீறுமாக என்னை அன்புடன் வரவேற்றான். ‘எனக்குத் தெரியும் சார். கண்டிப்பா நீங்க யாராவது வருவிங்கன்னு...
தூர்தர்ஷன் நினைவுகள்
திடீரென்று இன்றைக்கு எங்கள் அலுவலகத்தில் – ஆசிரியர் குழுவில் பணியாற்றுவோருக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தோம். தூர்தர்ஷன் நினைவுகள் என்பது கருப்பொருள். எல்லோரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கட்டுரை இது. போட்டியில் நான் கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே இங்கே போட்டுவைக்கிறேன். 1 வழிய வழிய எண்ணெய் தடவித் தலை சீவி, ஒரு இஞ்ச் தடிமனுக்கு...
இரண்டில் ஒன்று
நினைத்து ரசிப்பதற்கு ஏற்ற தருணங்களை வாழ்வின் இளமைப்போதுகள் எப்போதும் காப்பாற்றி வைக்கின்றன. மழைக்காலத்துக்கான உணவைக் கோடையில் சேமிக்கும் சிற்றெறும்பு போல. அப்படியொரு தருணம், துறவியாகலாம் என்று முடிவு செய்து நான் தாடி வளர்க்கத் தொடங்கியது. நகர்ந்த தினங்களில் ராமா என்னும் இமாலய சுவாமி ஒருவரின் [இவர் துறவியல்ல. மனைவி மக்கள் உண்டு.] Living with the Himalayan Masters எனும் புத்தகத்தை வாசிக்கையில்...


