அபாயகரம் - கவிதைத் தொகுப்பு. கிண்டில் பதிப்பு.
இது வேறு அது வேறு.
சார் வணக்கம். தயக்கத்துடன் இதைக் கேட்கிறேன். உங்களின் அருமையான அரசியல் வரலாற்று நூல் நிலமெல்லாம் ரத்தத்தையே இலவசமாகக் கொடுத்தீர்களே. யதி, இறவானுக்கு மட்டும் ஏன் தடை? (என் பெயரை வெளியிட்டுவிட வேண்டாம்.) இது சற்று நீண்ட விளக்கம் கோரும் வினா. சரி பரவாயில்லை. அடிப்படையில் நான் கதாசிரியன். என் பிரத்தியேக விருப்பத்துக்காக மட்டும் நாவல்கள் எழுதுபவன். வாசகர்களுக்கும் அவை பிடித்துப் போனால் மகிழ்ச்சி...
புவியிலோரிடம் வாசிப்பனுபவம் [பார்த்தசாரதி தென்னரசு]
எதேச்சையாக இன்று என்ன செய்யலாம் என்று நினைத்தவாறே ராசிபலனில் “அடுத்தவருக்காக பொறுப்பேற்காதே” என்ற எச்சரிக்கையை வாசித்துவிட்டு, நம்மால் ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை போல அலுவலகத்தில் என்ற தெளிவுடன்… கணிணியில் கிண்டில் ஆப்-பை திறந்து புத்தக வரிசையை துழாவி ஒரு வழியாக ‘புவியிலோரிடம்’ வாசிக்க தொடங்கினேன். ஏற்கனவே ஓரு நாள் முன்னுரையில் ஒரு பக்கம் வாசித்திருந்ததால், ஒரு...
இறவான் – சுரேஷ் பவானி
“பொறாமை! தான் வாழும் காலத்தில் தன்னை விஞ்சும் ஒருவன் வந்துவிடக்கூடாது என்று நினைத்துவிட்டான். நீங்களே சொல்லுங்கள். ஒரு நல்ல கலைஞன் அப்படி நினைப்பானா? கலை என்பது தெய்வம் அல்லவா? கலைஞன் என்பவன் தெய்வத்தின் ஆராதகன் அல்லவா?” கத்தினான் அவன். காகிதங்களை கிழித்தெறிந்தான் அவன். தீயிட்டும் கொளுத்தினான் அவன். பிறகு முகம் கழுவி டீயொன்றும் குடித்தான் அவன். அவன் யாரென்று உங்களுக்குத் தெரியும்...
இறவான் – ஒரு பார்வை [சிவராமன் கணேசன்]
இதை எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை. ஒரு அபாரமான படைப்பை வாசித்துமுடித்தபிறகு உடனே வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு அந்தகாரத்தனிமைதான் இந்த நள்ளிரவில் என்னைச்சூழ்ந்திருக்கிறது. ஆசிரியர் பா.ராகவனின் இறவான் நாவல் ஒரு காவியம். அதற்கு மேல் ஏதேனும் சிறந்த வார்த்தை இருந்தாலும் போட்டுக்கொள்ளுங்கள். நான் உணர்ச்சிவசப்படவில்லை, முகஸ்துதி செய்யவில்லை, இதன் உள்ளடக்கம் சொல்லும் சப்டெக்ஸ்ட் சாதாரணமானதல்ல...
ஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்
[அமேசான் pen to publish போட்டி தொடர்பாக ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த விவாதங்களுக்கு பதிலாக நவம்பர் 2, 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது] மூன்று நாள்களாகப் பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு வேலை. இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். அனைத்துக்கும் கருத்துச் சொல்ல ஆயாசமாக உள்ளது. பொதுவாகவே எனக்குக் கருத்து சொல்வது ஒவ்வாமை தரும். அவரவர் கருத்து அவரவருக்கு...
Pen to Publish 2019 – போட்டி அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில் இம்முறை தமிழுக்கான தேர்வுக் குழுவில் நானும் நண்பர் சரவண கார்த்திகேயனும் இருக்கிறோம். தேர்வு செய்வதெல்லாம் பிற்பாடு நடப்பது. இப்போட்டியில்...
வெட்டி முறித்த காதை
பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில்...