வலை எழுத்து

மணிப்பூர் கலவரம்: புதிய புத்தகம்

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம். இதுதான் தலைப்பு. கடந்த ஐந்து மாதங்களாகச் செய்துகொண்டிருந்த ஆய்வு நிறைவு பெற்று, இப்போது புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எழுத்து பிரசுர வெளியீடாக விரைவில் வெளிவரும்.
அட்டைப் படம் வடிவமைப்பு: பாலா, சேலம்.

பெய்வினைத்தொகை

பாயசத்தில் அப்பளம், சாம்பார் சாதத்துக்கு வெல்லம், காப்பியில் ஓமப்பொடி என்று மாறுபட்ட ருசி விரும்பும் நண்பர்கள் பலர் எனக்குண்டு. எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி தயிர் சாதத்துக்கு நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவாள். எனக்கே இம்மாதிரியான சில ஏடாகூடப் பழக்கங்கள் உண்டு. அது இருக்கட்டும். தோசைக்கு ஊறுகாய் தொட்டுச் சாப்பிடுவோர் யாரையாவது தெரியுமா? பாரதியார் அப்படித்தான் சாப்பிடுவார் என்று அவரது மனைவி...

துறப்பதும் ஏற்பதும்

உணவு குறித்தோ, நொறுக்குத் தீனிகள் குறித்தோ எப்போது நான் என்ன எழுதினாலும் உடனே, ‘பேலியோ அவ்வளவுதானா?’ என்று யாராவது ஓரிருவராவது கமெண்ட் போட்டுவிடுகிறார்கள். அது ஏதோ கோயிலுக்கு நேர்ந்துகொண்டு மொட்டை போடுவது போல இங்கே நடக்கிறது. இதுவரை அத்தகு கமெண்ட்களுக்கு நான் பதில் சொன்னதில்லை. ஐந்தாண்டுக் காலம் நான் பேலியோவில் இருந்தேன். 28 கிலோ எடை குறைத்தேன். 6.7 அளவில் இருந்த சர்க்கரையை 5.4க்குக் கொண்டு...

நடந்த கதை

காலை கண் விழித்து எழுந்த சில நிமிடங்களிலேயே ஹலோ எஃப்.எம்மில் சிவல்புரி சிங்காரம் சொன்னார். அன்பின் ரிஷப  ராசியினரே! இன்று நீங்கள் வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டும்.  என்றால், முழு நாளும் மொக்கை வாங்குவீர் என்று பொருள். அவர் சொல்லும் நல்லவையெல்லாம் நடக்கிறதோ இல்லையோ. இம்மாதிரியான ஆரூடங்கள் உடனடியாக பலித்துவிடுகின்றன. நேற்று இரண்டு முக்கியமான வேலைகள். காலை ஒன்று; மாலை ஒன்று.  விடிந்ததுமே...

கிறுக்குத்தனம்: 2004 வர்ஷன்

பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளைச் சில மாதங்களாக டெலிட் செய்து வருகிறேன். என்ன ஒரு ஐந்து பத்து ஐடி இருக்குமா, இது ஒரு ப்ராஜக்டா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஜிமெயில் அறிமுகமான காலத்தில் அதன் 15 ஜிபி இடம் என்பது ஒரு பயங்கரமான போதைப் பொருளைப் போல என்னைத் தாக்கியது. எப்படியாவது ஒரு பத்தாயிரம் ஜிபியை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று வெறிகொண்டு என்னென்னவோ பெயர்களில் அக்கவுண்ட்...

முதல் அச்சுக் கூடம்

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கி வார இதழில் பணிக்குச் சேர்ந்தேன். சுமார் முக்கால் மணி நேரம் நாற்காலியில் உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து கீழே உள்ள அச்சுக் கூடத்தைச் சுற்றிப் பார்க்கப் போய்விட்டேன். ஓர் அச்சு இயந்திரத்தைப் பார்ப்பது என்பது அந்நாளில் என் பெருங்கனவாக இருந்தது. இந்த உலகின் வேறு எந்த அதிசயமும் அன்று எனக்கு அவ்வளவு ஆர்வமூட்டக்கூடியதாக இருந்திருக்க...

சுண்டல்

டாஸ்மாக் என்கிற அரசு நிறுவனமோ, அதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த காயத்ரி ஒயின்ஸ், குஷ்பு ஒயின்ஸ், ரஞ்சி ஒயின்ஸ் போன்ற களப்பிரர்களோ பேட்டைக்கு வருவதற்கு முன்னால் ரயில் நிலையத்துக்கு நேரெதிரே ஒரு சைக்கிள் ஸ்டாண்டும் அதனருகில் ஒரு சாராயக்கடையும் (Arrack Shop என்று ஆங்கிலத்திலும் எதற்கோ எழுதியிருப்பார்கள்.) இருந்தன. சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள் வழியாகவே சாராயக்கடைக்குள்ளே சென்றுவிட...

சர்வநாச பட்டன் – 10

அதிகாரம் 10: உறவினர் 1. எனது ஸ்பாம் ஃபோல்டருக்கு ரிலேடிவ்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் செலக்ட் ஆல், டெலீட் பொத்தானை அமுக்கும்போதெல்லாம் அப்படியொரு ஆனந்தப் பரவசம் உண்டாகிவிடுகிறது. 2. என் அனுமதி இன்றி என்னைச் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி, மாப்ள, மச்சான், சகலை, தாத்தா, பேராண்டி என்றெல்லாம் அழைக்க எவன் எவனோ எவன் எவனையோ பெற்றுப் போட்டுவிட்டிருக்கிறான். இதெல்லாம் மனித...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter