பா.ராகவனின் ‘யதி’ – 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல் துறவுப் பாதையை நாடும் நான்கு சகோதரர்களின் கதை. பேசுபொருளின் ஈர்ப்பால் எளிதாகக் கதைக்குள் ஈடுபடுத்திக் கொண்டு மூன்று தினங்களில் நிறைவு செய்ய முடிந்தது. ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அடுத்தடுத்த காலகட்டத்தில் துறவின் வெவ்வேறு பாதைகளைத் தேர்கின்றனர். அப்பாதைகளில் அவர்களை செலுத்தும் நிகழ்வுகள், திசைமாற்றிவிடும் நிமித்தங்கள், அவர்கள்...
விபூதி யோகம்
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு அடிக்கடிச் செல்வேன். காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வழக்கமாகியிருந்தது. அப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம் ஐந்து நாள்கள் வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வெள்ளிக்கிழமை மாலை ரயில் ஏறினால் சனிக்கிழமை காலை பதினொன்றரைக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்துவிடலாம். ஞாயிறு மாலை வரை அங்கு இருந்துவிட்டுக் கிளம்பினால் திங்கள் முதல் மீண்டும்...
யதி – ஒரு மதிப்புரை (திவாகர். ஜெ)
“சாமியார்கள் பற்றிய நூல்கள் ஏதேனும் இதற்கு முன் வாசித்து இருக்கிறீர்களா? நான் ஒரே ஒரு நூல் தான் வாசித்து இருக்கிறேன். ”சாமியார்களின் திருவிளையாடல்கள்” என்ற நூல். அதில் போலிச் சாமியார்கள் குறித்தும், மண், பெண் என அத்தனையின் மீதும் அவர்கள் செய்த காவாலித்தனங்கள் குறித்தும் ஆதாரத்தோடு விளக்கப்பட்டிருக்கும். மற்றபடி, சாமியார்களுக்கும், நமக்கும் இப்போது உலகம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சமூக இடைவெளியை...
யதி – துறவின் அறியாத பக்கங்கள் (ஜார்ஜ் ஜோசப்)
ஒரு வாரமாக யதி நாவலில் மூழ்கியிருந்தேன். சன்னியாசிகள் குறித்து ஆயிரம் பக்கங்கள். சலிப்பே தராமல் அழைத்துச் சொல்கிறது எழுத்து. நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளும், ஒருவர் பின் ஒருவராக சந்நியாசி ஆகிவிடுகின்றனர். அவர்களைப் அப்பாதையில் செலுத்தியது என்ன? என்கிற முடிச்சை இறுதியில் தான் அவிழ்க்கிறார் பாரா. ஆனால், முன்பே அது எப்படி அவிழும் என்று கோடிட்டு காட்டிவிடுகிறார். முடிந்தால்...
யதி – அபிலாஷின் விமரிசனத்தை முன்வைத்து (Jinovy)
யதிக்கு இன்று அபிலாஷ் எழுதிய விமரிசனத்தில் Jinovy ஒரு கமெண்ட் போட்டிருந்தார். அது கூட்டத்தில் காணாமல் போய்விடாமல் தனியே வாசிக்க வேண்டிய குறிப்பு என்று தோன்றியதால் இங்கே பிரசுரிக்கிறேன். — மரியாதைக்குரிய பாரா சார் அவர்களுக்கு, எவ்வகையிலும் இது ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் விளைவாக என்னால் காண இயலவில்லை. அதற்கான காரணங்கள்: 1. இந்த கதை விமலின் ஊடாக வெளிப்படுவது. மற்ற மூவரின் உள்ளுணர்வுகளின்...
யதி – ஒரு மதிப்புரை (அபிலாஷ் சந்திரன்)
பா.ராவின் ஆயிரம் பக்க “யதி” நாவலை இன்று தான் படித்து முடித்தேன். படிக்க சிரமமான நாவல் ஒன்றுமல்ல. தொடர்ந்து படித்தால் நான்கைந்து நாட்களில் யாராலும் படித்து முடிக்க முடியும். நான் புத்தகத்தை வாங்கிய நாள் இரவில் முதல் 90 பக்கங்களை படித்து ஒரு வாரம் கழித்து மீண்டும் படித்து விட்டு விட்டு படித்தேன். எந்த கட்டத்திலும் அலுப்பூட்டவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும் – அதற்கு காரணம் பா.ரா கதையை...
50
ஒவ்வொரு நாளும் வாழ்ந்து, உறங்கி, எழுவதையே ஒரு சாதனையாக எண்ண வைத்திருக்கும் காலத்தில் வயது ஏறுவதெல்லாம் ஒரு பெருமையா. ஆனால் ஐம்பதைத் தொடும்போது சிறிது நிறுத்தி மூச்சு விட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்கலாம்; தவறில்லை. இவ்வளவு நீண்ட வருடங்களில் இதுவரை என்ன செய்ய முடிந்திருக்கிறது? எழுதத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் அடிக்கடித் தோன்றும். நான் அதுநாள் வரை ஆட்டத்துக்கு வராததால்தான் யார் யாருக்கோ நோபல் பரிசு...
யதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N
அன்புள்ள ராகவன் சார், இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மெயில். சாருவுடன் பலமுறை பேசியிருக்கிறேன். அவரிலிருந்து தான் நான் வாசிக்கவே தொடங்கினேன். இந்திய ஞான மரபு, சித்தர்கள் குறித்து ஓரளவு வாசித்துக்கொண்டிருந்தேன். நிறைய அபுனைவுகள், எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ பொறுமையோ இல்லை என்பதை வரிக்கு வரி நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், எதேச்சையாக உங்கள் ‘யதி’ சலுகை விலையில்...