வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள்.பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார். கரும்பு தின்னக்கூலியா? என்றாலும் ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்? என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 42)
புவியில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக் கொண்டு நீலவனத்தில் குடியுரிமை பெற்றிருக்கும் தன் இரசிகர்கள் மூலம் வெண்பலகை வழியே அங்கும் தன் புகழை பரப்பச் செய்து வரும் எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாட்டையும், மாடலையும் தனக்கான முன் மாதிரியாக சாகரிகா எடுத்துக் கொள்கிறாள். நிழலை நம்பி ”சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் தனக்கான சமஸ்தானத்தை முறைப்படி அமைக்கிறாள். கோவிந்தசாமியின் நிழலுக்கு இருக்கும் தன்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 41)
தன்னைக் காதல் வலை(சூழ்ச்சி)யில் வீழ்த்தி காரியம் முடிந்ததும் தூக்கியடிச்சிட்டு போனவளை பரிகாசிக்கவும் முடியாமல், காதலைத் துறக்கவும் முடியாமல் கலங்கிப் போன நிழல் காதலில் காயப்படுபவனின் கடைசிப் புகலிடமாய் இருக்கும் சாரயக்கடைக்கு வந்து சேர்கிறது. அங்கு கோவிந்தசாமியும் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான். பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்கிறார்க்ள். சோகத்தின் வீரியம் குறைய இடைஇடையே பெக்கோடு ஏமாற்றங்களுக்கும்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 40)
கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவை தனதாக்கிக் கொள்ள கொண்டிருந்த விரதத்தைக் கைவிடுகிறது. தன் சிந்தனைக் கதவைத் திறந்து விட்ட ”காதலி”யைத் (செம்மொழிப்ரியா) தவிர தன் மனதில் எவருக்கும் இடமில்லை என சத்தியம் கொள்கிறது. உனக்காக நான் என் சாம்ராஜ்யத்தையே துறப்பேன் என்ற காதல் மொழியை தன் காதலியிடம் சொல்லி காதலை வெளிப்படுத்துகிரது. இதெல்லாம் கலியுகக் காதலில் சகஜம் தான்! தன் சொல்லுக்கு இயங்கும் சாட்டையாய் நிழலை...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 39)
நீலநகர நுழைவாயிலில் கழற்றி விட்ட கோவிந்தசாமியை நீலநகரவனத்தில் சூனியன் சந்திக்கிறான். அவரவர் பக்க நியாயங்களை சொல்லிக் கொள்கிறார்கள். வழக்கம் போல் சூனியனே தன் தரப்பை நிலை நிறுத்துகிறான். பா.ரா., கடவுள் என இருவரையும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் வறுத்தெடுக்கும் சூனியன் இப்போதும் விட்டு வைக்கவில்லை. சாகரிகாவுடன் நிழல் நட்பானது, நிழலுக்காக அவள் சமஸ்தானம் அமைத்துத் தர இருப்பது ஆகிய தகவல்களை சூனியன்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 38)
நூலகத்திற்குள் நுழைந்த கோவிந்தசாமியின் கண்களில் பட்டுவிடக்கூடாது என சாகரிகா பதறுகிறாள். அதற்கு வழி சொல்லும் ஷில்பா நூலக அடுக்கில் புத்தகம் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடி ஒன்றின் முகத்தை திருகி சாகரிகாவுக்கு பொருத்தி விட்டு அவளின் முகத்தை தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள். கோவிந்தசாமியை அடையாளம் கண்டு கொண்ட நூலகர் மூலம் வெண்பலகையில் தன் சல்லாப வீடியோ வெளியானதையும், நூலகத்திற்கு சாகரிகா...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 37)
நூலக சமஸ்தான வாசலை சாகரிகாவும், ஷில்பாவும் வந்தடைகிறார்கள். வாசலில் முதிர்ந்த யாளி ஒன்று மயங்கிக் கிடக்கிறது. யாளிகள் பற்றிய சுவராசியத் தகவல்களோடு அத்தியாயம் விரிகிறது. நூலகர் மூலம் சாகரிகாவை அடையாளும் கண்டு கொள்ளும் வனவாசிகள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அழகுக் குறிப்பெல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள். வாசிக்கும் நமக்கும் அழகுக்குறிப்புகள் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் செயல்படுத்திப்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 36)
இந்தத் தலைப்பை பா.ரா.விடம் நேரடியாக எவரேனும் சொன்னால் அதற்கு அவரின் எதிர்வினை எப்படியிருக்கும்? எனத் தெரியவில்லை. ஆனால், சூனியன் சர்வசாதாரணமாக சுழற்றி அடிக்கிறான். சத்தியசோதனை போல பா.ரா.வே தன்னைப் பற்றி மதிப்பிடும் சுயசோதனை போலும்! போகட்டும். இந்த அத்தியாயத்தில், தன் படைப்பாக்கத்தில் தனக்கு நிகர் தான் மட்டுமே! இந்த விசயத்தில் கடவுள் கூட என்னை நெருங்கமுடியாது என மார்தட்டும் சூனியன் ”மாற்றான்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 35)
தான் திருப்பதி போய் வந்த சுவராசியப் பின்னனியோடு சகபயணிகளுக்கு தன்னிலை விளக்கமும், தான் வருவதற்கான நோக்கமும் குறித்து விளக்கியபடியே நீலநகரவனத்துக்குள் கோவிந்தசாமி நுழைகிறான். இரவு ராணி மலர் பூக்கும் தடாகம் தேடிக் கிளம்பும் கோவிந்தசாமியை தமிழ் அழகியும், முல்லைக் கொடியும் சந்திக்கும் போது அவர்களைப் பார்த்து ”சதிகாரிகள்” என அவன் அலற அவர்களோ அவனை மஜாஜ் மூலம் சாண்ட்விச்சாய் உருட்டி எடுக்கிறார்கள்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 34)
செம்மொழிப்ரியாவின் வார்த்தை வசியத்தில் கோவிந்தசாமியின் நிழல் கரைய ஆரம்பிக்கிறது. சத்தியம் செய்யக் கூட சப்த நாடியும் ஒடுங்கும் இடத்தை சுட்டியிருப்பது உச்சம்! நிழல் செம்மொழிப்ரியாவிடம் சாகரிகாவை விரும்பியது உள்பட தன் கதையை விவரிக்கிறது. சாகரிகாவுக்காக உதவுவதற்கான திட்டம் குறித்தும் சொல்ல அந்த முனையில் நிழலின் மனதில் சந்தேக சலசலப்பை உருவாக்கி அதன் நோக்கத்தை திசை திருப்பி விடுகிறாள். கூடவே, மந்திர...