Archive2011

மழையும் மற்றதும்

கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் நான் இதற்குமுன் பார்த்திராத பல பகுதிகளுக்கு, படப்பிடிப்பு நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சில இடங்கள் சென்னைக்குச் சற்று வெளியேயும் இருந்தன. எப்படி ஆனாலும் அதிகபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரத் தொலைவுக்குள் இருந்த இடங்கள். ஒரு சுமாரான மழைக்கு நகரம் எத்தனை நாசமாகிவிடுகிறது என்பதை இந்தப் பயணங்களின்போது கண்கூடாகப் பார்த்தேன். குறிப்பாக, போரூர்...

பதிலளிக்கும் நேரம்

கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.
இது பதிலளிக்கும் நேரம்.

நாளை ரிலீஸ்

நான் வசனம் எழுதியிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.
தொடர்புடைய முந்தைய குறிப்புகள்: ஒன்று | இரண்டு
படம் பார்க்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

மறந்தும் இருந்துவிடாதீர்கள்!

சாக்கடை அடைப்புகள். தார் காணா வீதியின் மேடு பள்ளங்கள். குவியும் குப்பைகள். நாய்த் தொல்லை. பன்றித் தொல்லை. கொசுத் தொல்லை. பிளாட்பார ஆக்கிரமிப்புகள். மட்டரகமான குடிநீர் வினியோகம். மோசமான மழைநீர் வடிகால். அன்றாட வாழ்வின் அசகாயப் பிரச்னைகள் கடந்தவாரம் முழுதும் ஆட்டோ ஏறி வீதிவலம் வந்தன. உண்மையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கூம்பு மைக் ஆட்டோக்களில் உட்கார்ந்தபடிக்கு மேற்படி பிரச்னைகளை...

ஜடாமுடிக்கு வழியில்லை!

பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது. மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி...

எனக்கு வேணாம் சார்!

நெடுந்தூரப் பேருந்துப் பயணம் ஒன்றில்தான் முதல்முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். ரொம்பக் கோபத்தில் இருந்தார். அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஏன் இன்னும் இருபதாம் நூற்றாண்டிலேயே இருக்கின்றன? பயணிகளின் முதுகுகள் மற்றும் முழங்கால்கள் குறித்து முதல்வருக்குப் போதிய அக்கறை இல்லை. தி ஹிந்துவுக்கு யாராவது வாசகர் கடிதம் எழுதிவிட்டு மெரினா கடற்கரையில் ஒரு கண்டன மாநாடு நடத்தினால் அவர் வந்து கலந்துகொண்டு...

எழுத்துக் கல்வி

புத்தகங்கள் வாங்க

வலை எழுத்து

தொகுப்பு

வகை

RSS Feeds

படைப்புகளை மின்னஞ்சலில் பெற


நூலகம்

மின்னஞ்சல்

para@bukpet.com