வலை எழுத்து

விழித்திருப்பவன்

பாரிஸ் ரெவ்யுவின் ஆர்ட் ஆஃப் ஃபிக்‌ஷன் பகுதியில் இடாலோ கால்வினோவின் நேர்காணலைப் படித்துக்கொண்டிருந்தேன். தன்னால் காலை நேரங்களில் எழுத முடிவதில்லை என்றும் பெரும்பாலும் மதியத்தில்தான் எழுதுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். வினோதமான பிரகஸ்பதி. நமக்கெல்லாம் மதியம் என்பது நள்ளிரவு. என்ன செய்ய. பழகிவிட்டது. ஆனால் இரவில் நெடுநேரம் கண் விழிப்பது தவறு என்று பொதுவாக அனைத்து மருத்துவர்களும் சொல்கிறார்கள்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 5)

ஏன் தனக்கு கோவிந்தசாமியை பிடித்துப்போனது என்பதற்கு சூனியன் சொல்லிய காரணம் மிகவும் பிடித்திருந்தது. மூடனாக இருப்பது தவறல்ல. ஆனால் அவ்வாறு இருந்துக்கொண்டு அதை உணராது செய்யும் மேட்டிமைத்தனங்களை கண்டால் யாருக்கும் எரிச்சலாக இருக்குமல்லவா. இங்கு கோவிந்தசாமி அவ்வாறு இல்லை. அவனை மூடனாகவே ஆசிரியர் கதையில் சித்தரித்திருக்கிறார். அதை அவன் உணரவும் செய்கிறான். ஆனால் மாற்றிக்கொள்வதில்லை. அவ்வளவுதான். அந்த...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 8)

அதாவது கோவிந்தசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் இந்தியைப் தேசம் முழுவதற்குமான ஒரே மொழியாக அறிவித்து விட வேண்டும் என்று ஆவேசப்படுவதில் இருக்கின்ற நுட்பமான அரசியல் தான் இந்த அத்தியாயத்தில் நறுக்கென்று தைத்த ஒரு விஷயம். அதிலும் தெரியாத மொழியில் அந்த தலைவர் வசைபாடுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் உணர்ச்சி வசப்படுவது எல்லாம் அங்கதத்தின் உச்சம். உள்ளே வரும் யார் வேண்டுமானாலும் குடியுரிமை பெற்று விடலாம்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 4)

மாயாஜால உலகிலிருந்து நழுவி எதார்த்த உலகிற்கு பயணிக்க தொடங்கியிருக்கிறது. பிரமாண்டமாக பயணித்த முந்தைய அத்தியாயங்களில் இருந்து சற்று ஆசுவாசமாக இந்த அத்தியாயம் சிரிக்க வைத்து பார்க்கிறது. அதிலும் அந்த கடைசி வரி. கோவிந்தசாமிக்கு எதிர்மறையான சாகரிகா. எதிலும் அவளுக்கு இவன் பொருத்தமில்லை. இது எப்பிடி பயணிக்கும் எனும் ஆவல் எனக்குள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. மாய உலகில் பயணிக்கும் அத்தியாயங்களில்...

கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 8)

கோவிந்தசாமி பிறந்திருக்கக்கூடாது. பிறந்து விட்டான். அவன் அறிவுக்கு இயக்கங்கள் பக்கக் போயிருக்கக்கூடாது. போய் விட்டான். திருமணமாவது செய்திருக்கக்கூடாது. செய்துவிட்டான். மனைவி மீது அளப்பற்கறிய காதல் வைத்திருக்கக்கூடாது. வைத்து விட்டான். மனைவி வெறுக்குமளவு நடந்திருக்கக்கூடாது. நடந்து கொண்டான். ஒழிந்து போகிறதென விட்டு நீலநகரம் வந்திருக்கக்கூடாது. வந்து விட்டான். சூனியனை கண்டிருக்கக்கூடாது. கண்டு...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 8)

இந்த கோவிந்தசாமி இருக்கிறானே அவன் தனது நிழலை சூனியனுடன் அனுப்பிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்காகக் காத்திருக்கிறான். அதற்குள் நாமும் அவர்களுடன் சென்று அந்த நகரைப்பற்றி ஒருசில விஷயங்கள் தெரிந்துவந்து விட்டோம். ஆனாலும் இன்னும் அந்நகரைப்பற்றி எதுவும் புரியாமல் சுற்றிவந்து கொண்டிருக்கும் அவனை நினைத்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. அதிலும் அந்த வெள்ளைநிறப் பலகையில் வரும் தகவல்களெல்லாம் தன்னைப்...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 7)

மனிதர்களின் உலகத்தில் அந்தரங்கமானவையாக இருக்கும் அனைத்தும் நீல நகரத்தில் வெளிப்படையாக இருக்கின்றன. உடல், உள்ளம், உணர்வு என்று எதுவும் விதிவிலக்கல்ல. இப்படிச் சொல்வது மேலோட்டமான பார்வை யாக கூட இருக்கலாம். ஆனால் இதை வாசிக்கையில் மனம் திடுக்கிடத்தான் செய்கின்றது. கற்பனை செய்து பார்க்கவே சற்று பயமாகத்தான் இருக்கிறது. சாகரிகாவின் நிராகரிப்பு கோவிந்தசாமியுடனான அவளுடைய உரையாடலின் ஒவ்வொரு வசனத்திலும்...

கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 7)

நினைத்தது சரிதான். சூனியனும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனான். கோவிந்தசாமியின் நிழலுக்கும் கோவிந்தசாமியைப்போலவே சாகரிகாவின் மீது அளவற்ற காதலோ.. அலத்து பிரதிபிம்பம் அசலுக்காக அங்கலாய்கிறதோ, எதுவோ ஒன்று சாகரிகாவிடம் கெஞ்சத்துவங்கிவிட்டது. ரகசியமற்ற மாயஉலகில் கோவிந்தசாமியின் வருகைக்கான காரணம் பகிரங்கப்பட்டது தான் மிச்சம். நீலநகரம் சராசரி மனிதர்களின் நேரெதிர் குணாதிசயம் கொண்டவர்களாக தோன்றுகிறது...

கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 6)

பூவுலகிலிலிருந்து மாய நீலநகரம் பயணித்த கோவிந்தசாமிக்கு இப்போதைக்கு சூனியன் கடவுள் மாதிரி தான் தெரிந்திருப்பான். கோவிந்தசாமியின் குணம் புதிய விஷயங்களை கவனிக்கவோ ஆச்சரிக்கவோ செய்யாமல் சாகரிகாவை மட்டுமே இலக்காக கொண்டு தன் நிழலை சூனியனுடன் அனுப்பி உள்ளான். கோவித்தசாமியின் நிழல் சற்று பரவாயில்லை. கொஞ்சம் ஆச்சரியப்படுகிறது நீலநகரின் மனிதர்களை பார்த்து! ஆனால் சூனியன் அனைத்து விஷயங்களையும் கவனிக்கிறான்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 8)

“நதிக்கறை” என்ற தலைப்பை பார்த்ததும் ஆசிரியரின் எழுத்துப் பிழையோ என்று முதலில் நினைத்தேன். தொடர்ந்து வாசித்துச் செல்கையில் அது சரயு நதியை கோவிந்தசாமி களங்கப்படுத்தியதன் ”கறை” எனத் தெரிந்தது. தன் நிழலோடு போனவன் திரும்பாததால் கோவிந்தசாமி நீலநகருக்குள் நுழைகிறான். சாப்பாட்டுக் கடை தேடி திரிந்தவனுக்கு ஒரு தேநீர் கடை கூட கண்ணில் படவில்லை. அயர்ச்சியோடு நடந்து வரும் போதே அவனுள் பிளாஷ்பேக் ஓட ஆரம்பித்து...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓