அரசியல்

ரஜினி: நடிகரும் தலைவரும்

என் நண்பர்களில் சிலர் தீவிரமான ரஜினி ரசிகர்கள். அவரைத் தலைவர் என்று குறிப்பிடுபவர்கள். பன்னெடுங்காலமாக அவர் அரசியலுக்கு வருவார், வருவார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு முறை ரஜினி கூட்டம் கூட்டி விரைவில் முடிவெடுப்பேன் என்று சொல்லும்போதும் என்னமோ திட்டமிருக்கு என்று சொல்வார்கள். கேலி கிண்டல்களை விலக்கி, இம்மனநிலையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். ரஜினி ஒரு நடிகர் என்பதைவிட,… Read More »ரஜினி: நடிகரும் தலைவரும்

இரண்டு முக்கிய அறிவிப்புகள்

1. நானும் நீங்களும் கற்பனை செய்யமுடியாத, எமது மனங்கள் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறி விட்டது. எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதனை நான் இங்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். – செல்வராஜா பத்மநாதன், GTVயில். [ஏன் தமிழ்நெட்டில் அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை] 2.  பழ. நெடுமாறன் அறிக்கை. இது அபத்த அரசியல்களின் நேரம்.

முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?

மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம்.   தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்‌ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று வயது) தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருப்பதே இதற்காகத்தான் அல்லவா? பிரபாகரன் துப்பாக்கி எடுத்ததெல்லாம் எழுபதுகளின் பிற்பகுதியில் தானே? அதற்கு முன்னால் இந்த மெஜாரிடி, மைனாரிடி பாகுபாடுகள், அடக்குமுறைகள், அத்துமீறிய குடியேற்றங்கள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் சமர்த்தாகப் படித்து ஏதாவது உத்தியோகத்துக்குப் போயிருப்பாரே? அவருக்கு முந்தைய தலைமுறையினர் அமைதியாகப் போராடிப் போராடி ஓய்ந்து போனதைப் பார்த்துவிட்டல்லவா பிரபாகரன் தலைமுறையினர் ஆயுதம் எடுத்தார்கள்? வேறு வழி தெரியாமல்தானே மக்களும் ஆதரித்தார்கள்? அதிபர் இப்படியெல்லாம் சகவாழ்வு, சுக வாழ்வு என்று பேசினால் சிங்களப் பேரினம் சும்மா இருந்துவிடுமா?

சரித்திரம் அப்படித்தான் இருக்கிறது. தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சிறு நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டாலும் அரசையே ஒழித்துக்கட்டுமளவுக்குத்தான் சிங்கள மக்களும் பவுத்தத் துறவிகளும் இலங்கையில் இதுநாள்வரை நடந்துகொண்டிருக்கிறார்கள். செல்வா – பண்டா ஒப்பந்தம், செல்வா – சிறிமாவோ ஒப்பந்தம் பற்றியெல்லாம் நாம் யுத்தம் சரணம் தொடக்க அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். எது ஒன்றும் உருப்பட்டதாக வரலாறில்லை.

இந்நிலையில் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்ட காரணத்தினாலேயே சிங்கள மக்கள் தமிழர்களைச் சொந்த சகோதரர்களாக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள், சம உரிமை கொடுத்துவிடுவார்கள், சகோதரத்துவம் மேலோங்கிவிடும் என்று எதிர்பார்க்கலாமா? அதிபருக்கு இது தெரியாதா? தமிழர்களுக்கு இப்போது ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லவேண்டியது அவசியம்தான். அதற்காகத் தமது சொந்த இன மக்களை, தேசத்தின் பெரும்பான்மை வாக்காளர்களைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்புவாரா? எதிர்க்கட்சிகள்தான் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கச் சம்மதித்துவிடுவார்களா? ராஜபக்‌ஷேவுக்கே அப்படியொரு எண்ணம் இருக்குமானால், அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே செய்திருக்க முடியுமே? மொழி முடக்கம், கல்வி முடக்கம், வேலை வாய்ப்புகளில் முடக்கம் என்று தொடங்கி சரித்திரம் முழுதும் தமிழர்களைக் கொத்தடிமைகள் மாதிரி வைத்திருந்ததன் விளைவல்லவா இத்தனை பெரிய அவலம்?

எனில் அதிபரின் பேச்சுக்கு என்ன அர்த்தம்?Read More »முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?

போட்டாச்சு.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, சரியாக நாற்பது நிமிடங்கள் கழித்து என்னுடைய வாக்கைப் பதிவு செய்தேன். எப்போதும் வாக்குச்சாவடியில் முதல் பத்து வாக்காளர்களுள் ஒருவனாக இருப்பதே என் வழக்கம். இம்முறை கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி குரோம்பேட்டை சென்று வாக்களிக்க வேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது. நான் குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போதே நல்ல கூட்டம் இருந்தது. பொதுவாக… Read More »போட்டாச்சு.

மூன்று விஷயங்கள்

நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித் ததும்புகின்றன. போக்குவரத்து நின்றுவிட்டது.… Read More »மூன்று விஷயங்கள்