புத்தகம்

எழுபதில் ஒன்று

சரித்திரம் தூக்கிக் கொஞ்சுகிறதோ, போட்டு மிதிக்கிறதோ. பெற்ற தாய் தனது பிள்ளைகளை கவனிக்காமலா இருப்பாள்? காந்தாரியைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். துர்சலை என்ற ஒரு பெண் குழந்தை உள்பட அவளுக்கு நூற்று ஒரு குழந்தைகள். அத்தனைப் பேரின் பெயர்களையும் அவள் எப்போதும் நினைவில் வைத்திருந்திருப்பாள். தனித்தனியே கூப்பிட்டு சாப்பிட்டாயா, குளித்தாயா, சண்டை போடாதே, உட்கார்ந்து படி என்று… Read More »எழுபதில் ஒன்று

50

ஒவ்வொரு நாளும் வாழ்ந்து, உறங்கி, எழுவதையே ஒரு சாதனையாக எண்ண வைத்திருக்கும் காலத்தில் வயது ஏறுவதெல்லாம் ஒரு பெருமையா. ஆனால் ஐம்பதைத் தொடும்போது சிறிது நிறுத்தி மூச்சு விட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்கலாம்; தவறில்லை. இவ்வளவு நீண்ட வருடங்களில் இதுவரை என்ன செய்ய முடிந்திருக்கிறது? எழுதத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் அடிக்கடித் தோன்றும். நான் அதுநாள் வரை… Read More »50

சன்னியாச தருமம்

நண்பர்கள் ஜடாயு, சொக்கன் இடம் சுட்ட, மாயவரத்தான் உதவியால் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட யாதவ பிரகாசரின் ‘யதி தர்ம சமுச்சயம்’ படிக்க ஆரம்பித்தேன். State University of New York Press வெளியீடாக Rules and Regulations of Brahmanical Asceticism என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. பூர்வாசிரமத்தில் ராமானுஜரின் குருவாக இருந்து பின்னர் சீடரானவர் யாதவ பிரகாசர்.… Read More »சன்னியாச தருமம்

நான் எப்படி எழுதுகிறேன்?

நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத நேரமிருக்கும்போது நாமென்ன இருபத்தி நாலு மணிநேரமும் உழைத்துத் தேய்ந்துவிடுகிறோம்?

நான் எழுதுகிற விதத்தைச் சொல்லுகிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் சாத்தியமானதுதான். ஒருவாரம் பழகினால் எளிதாக வந்துவிடக்கூடிய பழக்கமும்கூட.Read More »நான் எப்படி எழுதுகிறேன்?

சிங்கப்பூர் பயணம் 1

சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் சார்பில் எங்களை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கான இருநாள் எடிட்டிங் பயிலரங்கம். முடித்துவிட்டு, மூன்றாம் நாள் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாடநூல் உருவாக்கக் குழுவினருக்கான எடிட்டிங் பயிலரங்கம். நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நானும் பத்ரியும் இந்தப் பயிலரங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றோம்.… Read More »சிங்கப்பூர் பயணம் 1