இந்தக் கதையில் வரும் எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷ் இந்தக் கதையை எழுதுகிற எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷின் வீட்டுக் கதவைத் தட்டி, ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா?’ என்று கேட்டான். ராமு என்கிற சுரேஷ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒரு தமிழன் என்பதால், தமிழ் பண்பாட்டுக்கு பங்கம் நேராமல் வாசல் கதவைத் திறந்து, வரு, இரிக்யு என்று உள்ளே அழைத்து உட்கார வைத்து உபசரித்தான். (குடிக்க இன்னும்...
பலான கதை – 03
கதைத் திருட்டு அல்லது அத்தியாயம் மூன்று
பிரபல எழுத்தாளராகப் பின்னாளில் அறியப்படவிருக்கும் ராமு அல்லது சுரேஷின் சமீபத்திய சிறுகதை (ஒருவேளை இது நாவலாக நீளக்கூடும். தலைப்பு கபீஷின் வால்.) இவ்வாறு ஆரம்பமாகிறது:
பூமி அதிர்ந்தது.
பலான கதை – 02
கெமிங்வே கையசைத்த செம ஃபிகர் அல்லது அத்தியாயம் இரண்டு ஆங்கிலம் மட்டும் தெரிந்த எர்னஸ்ட் ஹெமிங்வே, ஆங்கிலேயர்கள் அதிகமில்லாத பிரான்சு தேசத்தின் தலைநகரான பாரிஸில் நடந்துகொண்டிருந்தபோது யாரோ மொட்டை மாடியில் இருந்து உப்பு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினாற்போல பனி பெய்துகொண்டிருந்ததை ரசிகக் கண்மணியொருவர் புகைப்படமெடுத்துப் போட்டார். புகைப்படமானது பல்வேறு பிரபவ, விபவ வருடங்களுக்குப் பிறகு தமிழில்...
பலான கதை – 01
முன்குறிப்பு :- இது ஒரு போஸ்ட் மார்டனிச, போஸ்ட் கலோனியலிச, (செமி) மேஜிக்கல் ரியலிச, கமர்ஷியல் கலைப்படைப்பு.
பாயிரம் அல்லது அத்தியாயம் ஒன்று
இந்தக் கதையின் நாயகனுக்கு முதலில் ஒரு பெயர் வைக்க வேண்டும். ராமு அல்லது சுரேஷ் என்று வைப்போமா?
சரி. ராமு அல்லது சுரேஷ்.
பதிவுத் தபாலுக்குப் பத்து நிமிஷம்
வர்த்தமானன் பதிப்பகத்தில் இருந்து (மகாத்மா காந்தி நூல் தொகுப்புக்காக) பணம் கட்டச் சொல்லி கடிதம் வந்துவிட்டது. ரூ. பத்தாயிரம் மதிப்புள்ள இருபது தொகுதிகளை சலுகை விலையாக ரூ.6000க்கு அளிக்கும் புண்ணியாத்மாக்கள். காசோலையைப் பதிவுத் தபாலில் அனுப்பச் சொல்லியிருந்தார்கள். எனவே குரோம்பேட்டை தபால் நிலையத்துக்குப் போயிருந்தேன். மருந்துக்கும் அங்கே கஸ்டமர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டும் ஆளுக்கொரு பக்கம்...
நான் கேசரி சாப்பிட்ட கதை
சிக்கல். பெரும் சிக்கல். ஒரு புருஷனாகப்பட்டவன் சமைக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்று விரும்புவது ஒரு பெண்ணாதிக்க மனோபாவம் என்பது பெரும்பான்மை மற்றும் மிச்சமிருக்கும் சிறுபான்மைப் பெண்களுக்குத் தெரிவதேயில்லை. இந்த அறியாமைக்கு உரம் போட்டு வளர்ப்பதில் சில பெண்ணியச் சார்பு ஆண்கள் அதிதீவிர ஆர்வம் காட்டுவது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அவலம். நான் வசிக்கும் அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்டின்...
அஞ்சலி: பால கைலாசம்
பால கைலாசம் மறைந்துவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியுற மனமாரப் பிரார்த்திக்கிறேன். கைலாசம் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். ஆனால் எப்போது சந்தித்தாலும் அந்த வித்தியாசத்தை உணர்ந்ததில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்னால் ஈக்காடுதாங்கலில் அந்த அலுவலக வாசலில் உள்ள பெட்டிக்கடையில் அவரைச் சந்தித்தேன். ‘ராகவன், உணவு குறித்த உங்கள் குமுதம்...
நான் என் தேசத்தை நேசிக்கிறேன்
நண்பர்களுக்கு சுதந்தர தின நல்வாழ்த்துகள். தேசப்பற்று உள்பட சகலமானவற்றையும் கிண்டல் செய்யும் ஆஃப்பாயில் அறிவுஜீவிதம் நாட்டில் மலிந்துவிட்டது. இணையப் பொதுவெளியில் இந்தப் போக்கு சமீப காலத்தில் மிகவும் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன். ஒரு பக்கம் இந்த ரக டிஜிட்டலி கரப்டட் அறிவுஜீவிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது. மறுபுறம் இத்தனை அபத்தங்களைப் பொதுவெளியில் வாந்தியெடுக்கும் சுதந்தரத்தையும் இந்த தேசமும்...
பரி(தாப)சோதனை
வேறு வழியில்லை. நீங்கள் சகித்துக்கொண்டே தீரவேண்டும் இத்தீராப் பரிசோதனைகளை. இது விரைவில் அழிக்கப்படும்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2013
நந்தனம் ஒய்யெம்சியேவுக்கு இடம் பெயர்ந்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இன்று மாலை சென்று வந்தேன். அண்ணாசாலை முகப்பிலிருந்து கண்காட்சி அரங்கைச் சென்றடைவதற்குள்ளேயே நாக்கு தள்ளி விடுகிறது. அதற்குமேல் அத்தனாம்பெரிய வரிசைகளை முழுதாக ஒரு முறை சுற்றி வந்தால் சுமார் நாலே முக்கால் கிலோ இளைத்துவிடலாம். இந்த இடப்பெயர்ச்சியின் விளைவாக நிறையப்பேர் வருவார்கள் என்று அமைப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்...