எனது மாயவலை மறுபதிப்பு தயாராகிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துவிடும். [மதிநிலையம் வெளியீடு]. 750 முதல் 900 வரை நல்ல மார்க்கெட்டிலும் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கள்ள மார்க்கெட்டிலும் [பின்னது பிரதிகள் மட்டும்] விலை போய்க்கொண்டிருந்த இக்காவியமானது மக்கள் பதிப்பு – மலிவுப் பதிப்பாக வெறும் ரூ. 500க்கு கிடைக்கும் என்பது இனிக்கும் சேதி. இவ்வினிப்புக்கு இனிப்பு சேர்க்க பதிப்பாளரானவர்...
புத்தாண்டு வாழ்த்து
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம். (திருவாய்மொழி 5.2.1)
நண்பர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2013ல் மின்வெட்டு குறைந்து யாவரும் நீண்ட நெடுநேரம் சீரியல் பார்த்துக் களிக்க எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த வருடம் என்ன செய்தேன்?
எழுதினேன் என்று ஒரு வரியில் முடித்துவிட முடியும். ஆனால் இந்த வருடம் என்னைச் செலுத்திய சில மனிதர்களை நினைவுகூர வேறு பொருத்தமான சந்தர்ப்பம் அமையாது. கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எண் புதிதாக இருந்ததால் யாரென்று தெரியாமல்தான் எடுத்தேன். ‘நான் முரளிராமன் பேசறேன். எப்படி இருக்கிங்க ராகவன்?’ என்றது குரல். திகைத்துவிட்டேன். மிகப் பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியில்...
அஞ்சல் வழித் துன்பம்
எனது குறுவரிக் குப்பத்தில் கொட்டுகிற ரத்தினக் குப்பைகளை உடனுக்குடன் வாசித்து மகிழ்வதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகள் குறித்து வாசகர்கள் அவ்வப்போது வருத்தம் தெரிவித்து வந்தார்கள். தளத்துக்கு நேரில் வந்து வாசிப்பது சிரமம், இங்கே எழுதுவது நேரடியாக ட்விட்டருக்கு வந்து விழும்படிச் செய்யமுடியுமா என்று கேட்டார்கள். இதென்ன போங்காட்டம்? ட்விட்டருக்கு மட்டும் போகலாம், இங்கே வரமுடியாதா? அதான் ஆர்.எஸ்.எஸ்...
கொத்தனாரின் நோட்டுசு
என் நண்பர் இலவசக் கொத்தனாரின் இலக்கணப் புத்தகம் வெளியாவதில் எனக்குப் பிரத்தியேக மகிழ்ச்சி. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டவன் நான். அந்த ஆசாமியைப் பிடித்து தமிழ் பேப்பரில் எழுத வைத்தபோது முதலில் பலபேர் சந்தேகப்பட்டார்கள். இலக்கணமெல்லாம் யார் படிப்பார்கள் என்றார்கள். நல்லவேளை, ஏன் படிக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. கொத்தனாரின் புத்தகத்துக்குச் சில சிறப்புகள் உண்டு...
இணையத்தில் மதி நிலையம்
என்னுடைய மற்றும் பலருடைய புத்தகங்களை வெளியிட்டு வரும் மதி நிலையம் ஒருவழியாகத் தனக்கொரு இணையத்தளத்தைத் தொடங்கியிருக்கிறது. தளத்தை இங்கே சென்று பார்க்கலாம். ஆனால் இத்தளத்தில் இப்போது காசு கொடுத்து நேரடியாகப் புத்தகங்களை வாங்கும் வசதி இல்லை. ஏனென்று தெரியவில்லை. வேண்டிய புத்தகத்தைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் கூரியர் அல்லது புறா மூலம் புத்தகத்தை அனுப்பிவைத்துவிடுவோம் என்று...
நற்செய்தி அறிவிப்பு
இணையப் பத்திரிகைகள், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற பொது வெளிகள் எதிலும் நான் பலகாலமாக எழுதாமலே இருந்து வருகிறேன். விட்டகுறையாக ட்விட்டரில் மட்டும் சமீப மாதங்கள் வரை எழுதி வந்தேன். இப்போது அதுவும் இல்லை. கடந்து சென்ற அக்டோபர் 24, விஜயதசமி தினம் தொடங்கி எனக்கான பிரத்தியேகக் குறுவரிப் பலகையை இத்தளத்துக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு அங்குதான் எழுதி வருகிறேன். இனி எழுதலாம் என நினைப்பவற்றையும் இங்கும்...
தலைப்பிட இஷ்டமில்லை
சாகிற காட்சியில் நடிப்பதைப் பொதுவாகக் கலைஞர்கள் விரும்பமாட்டார்கள். யாரையும் சாகடிக்காமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை இறுதிவரை நகர்த்திச் செல்ல முடியாது. வாழ்வைக் காட்டிலும் கதைகளில் மரணமானது மிகக் கோரமான வடிவம் கொள்ளும். ஒரு மரணக் காட்சியை எழுதுவது போன்ற இம்சை எழுத்தாளனுக்கு இங்கு வேறில்லை. எழுதுபவனை விடுங்கள். எடுப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய அவஸ்தை. ஒரு நடிகர் – அல்ல – ஒரு...
பேயோன் முன்னுரை
விரைவில் மிகப்பெரிய வெற்றியடையவிருக்கும்போது வெளிவரவிருக்கும் எனது ‘அன்சைஸ்’ புத்தகத்துக்குப் பேயோன் எழுதியிருக்கும் முன்னுரை பின்வருமாறு:- வாசக வாசகியரே, இந்நூலைப் படிக்குமுன் உங்கள் புன்னகை மீசைகளை முறுக்கி விட்டுக்கொள்ளுங்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள். பா. ராகவனின் இந்தப் புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை படித்த நேரமனைத்தும் ஒரு மெல்லிய புன்னகை எனது இதழ்களிரண்டிலும் ஒரு சராசரி எட்டு மாதக்...
பார்ட்டிப்ப்பாட்டு
இன்று கல்கி தீபாவளி மலர் உள்வந்திருக்கிறது. அதில் கோகுலம் பக்கங்களில் ஒரு பக்கமாக வெளிவந்திருக்கிற எனது உலக இலக்கியக் குழந்தைப் பாடல் பின்வருமாறு:- பட்டு வீட்டுத் தோட்டத்தில் பார்ட்டி தொடங்கும் அமர்க்களம் எட்டு தோழர், தோழியர் ஏரோப்ளேனில் வந்தனர். மிஸ்டர் பீனும் நாடியும் மீசை டோரி மானுடன் சிஸ்டர் டோரா புஜ்ஜியும் சிறகடித்து வந்தனர். குண்டுகாலி யாவுக்கு கோட்டு பேண்ட்டு மாட்டியே நண்பன் சோட்டா பீமுடன்...