நாவலின் கருப் பொருளுக்கேற்ப மொழி தன் முகத்தை மாற்றிக்கொள்ளும். அந்தந்த நாவல், தனக்குத் தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும்.
மதமும் ஆன்மிகமும்: கடிதம், ஆண்டனி ஃப்ரான்சிஸ்
நான் பயிலும் ஆன்மிகம் வேறு. அது மதத்தின் தொடர்பற்றது. அதாவது சொல்லி வைக்கப்பட்டதை அப்படியே நம்பி ஏற்காமல், எதையும் கேள்வி கேட்டு பதிலைத் தேடிப் பெறுகிற வழி.
நாளும் கள்ளும்: ஒரு கேள்வி – ரமணன்
சலத்தில் பலவிடங்களில் தாங்கள் ‘நாள்கள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இச்சொல் தொடர்பாக எனக்கிருக்கும் நீண்டகாலச் சந்தேகமொன்றை இங்கே தங்கள் முன் வைக்கிறேன்.
வட கொரியா, ஒரு கடிதம் – அப்துல்லா இப்னு நஸீர்
கம்யூனிசம் என்ற போர்வையை வட கொரியா போர்த்திக் கொண்டு இருப்பதெல்லாம் சோவியத்தின் மூலமாக நிதி ஆதரவை பெறுவதற்காகத்தானே தவிர கம்யூனிசத்திற்கான வாடையே இல்லாத நாடுதான் வட கொரியா.
பாடம்
போதி மரத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. சிறப்பெல்லாம் புத்தருக்குரியதே. ஆனால் அவர் தினம் ஒரு மரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்திருந்தால் நிச்சயமாக வேலை கெட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
சலம் எதைப் பற்றிய நாவல்?
ரிக்வேதத்தில் சூத்திர குலத்தில் உதித்த கவசன் என்கிற ரிஷியின் பாடல் ஒன்று உண்டு. பல்லாயிரம் பாடல்களைக் (அல்லது மந்திரங்களை) கொண்ட வேதத்தில் பிராமணரல்லாத ஒரே ஒரு ரிஷியின் பாடல் என்றால், அதுதான்.
யதி – ஒரு மதிப்புரை
என்றோ எழுதிய நாவல் என்றும் படிக்கப்படுவதினும் நம்பிக்கை தருவது வேறில்லை. செயல் சரியாக இருந்தால் விளைவு சரியாகவே இருக்கும்.
சலம் – எடிட்டிங் அப்டேட்
என் பதிப்பாளர் இரண்டு முறை அழைத்து, எப்போது முடியும் என்று கேட்டுவிட்டார். என்னைக் கேட்காதீர்கள், என் கழுத்தைக் கேளுங்கள் என்றா சொல்ல முடியும்?
சரியான தொடக்கம் – வினுலா
இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் தான் ஆசிரியர் பா ராகவன் அவர்களது குரலை முதல் முறையாகக் கேட்டேன். புத்தகங்கள் வழியாக அரசியலைப் புரிய வைத்தவர், அன்று எழுத்து எனும் தீவிர அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
கழுத்து வலி மாத்திரை ரூ. 12,500
எழுத்தாளர்களின் தலையாய பிரச்னைகளுள் முதன்மையானது, கழுத்து வலி. பண்டைக்காலத் தமிழ் சினிமா மணப்பெண்களைப் போலப் பெரும்பாலான நேரங்களில் குனிந்த தலை நிமிராமல் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதால் இது வருகிறது.