Search results forயதி

யதி – வாசகர் பார்வை 2 [எஸ். ஶ்ரீனிவாச ராகவன்]

நம் நாட்டில் சாமியார்கள் பலர் உண்டு. பரதேசி முதல் ராஜகுரு வரை… மக்கள் மனங்களை எத்தனை விதமாகப் பிரிக்க முடியுமோ, அத்தனை விதமான சாமியார்களும் உண்டு. ஆனால் வெகுஜனங்களின் மனத்தில் சாமியார் பற்றிய பிம்பம் ஒரே மாதிரி தான். அவர்  உணவு விருப்பம் துறந்தவராக இருக்க வேண்டும். பகட்டு துறந்தவராக இருக்க வேண்டும். சைவ பட்சிணியாக இருக்க வேண்டும். முக்கியமாக அவர் காமம் துறந்தவராக இருக்க வேண்டும். அத்தனை...

யதி – வாசகர் பார்வை 1 [உஷாந்தி கௌதமன்]

யதியின் முதலாவது அத்தியாயத்தில் ஒரு புதரைப் பற்றிய வர்ணனை வரும். ஒரு புதரில் வேறு வேறு செடிகள் எங்ஙனம் கிளைகளின் அடர்த்தியில் கூட சரியாகப் பிரிந்து இணைந்து ஒரே மரம் போல உருவாகியிருக்கும் என்று. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். யாருக்குமே ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லை. ஆனாலும் ஒன்றே போல ஒரு நூற்பின்னல் கொண்டு இணைக்கப்பட்டிருப்பார்கள். மொத்தக் கதையும் நான்காவது சகோதரனான விமலின்...

யதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு

இதனைப் போட்டி என்று குறிப்பிடச் சிறிது தயக்கமாக உள்ளது. ஒரு சிறிய பரிசோதனை முயற்சி. தினமணி இணையத் தளத்தில் நான் எழுதி வரும் ‘யதி’ நவம்பரில் நிறைவடைகிறது. ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் அது புத்தகமாக வரும். அத்தியாயங்களை நீங்கள் மொத்தமாக தினமணி தளத்தில் வாசிக்கலாம். யதி, முழுவதும் இங்கே சேமிக்கப்படுகிறது: இது புத்தகமாக வரும்போது யாரையாவது முன்னுரை எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது...

யதி – புதிய நாவல்

யதியை எழுதத் தொடங்குகிறேன்.  2009ல் என் அப்பாவின் புத்தகச் சேமிப்பை ஒரு நாள் அளைந்துகொண்டிருந்தபோது ஜாபால உபநிடதம் என்ற பழம்பிரதியொன்று கண்ணில் பட்டது. அது எத்தனை காலப் பழசு என்றுகூடத் தெரியவில்லை. முதல் சில பக்கங்கள் இல்லாமல், பழுப்பேறி, செல்லரித்து, தொட்டால் உதிரும் தருவாயில் இருந்தது அந்நூல். அப்பா வேதாந்த நாட்டம் கொண்டவரல்லர். அப்படியொரு பிரதியை அவர் தேடி அடைந்திருக்க முடியாது. யாரோ...

மணிப்பூர் கலவரம் கிண்டில் பதிப்பு

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலின் கிண்டில் பதிப்பு தயார். மார்ச் முதல் தேதி வெளியாகிறது. இன்று முதல் இந்நூலின் மின் பதிப்புக்கான முன்பதிவு தொடங்குகிறது. மின்நூலின் விலை ரூ. 225. முன்பதிவுச் சலுகை விலை ரூ. 150 முன்பதிவுச் சலுகை விலை பிப்ரவரி 28 நள்ளிரவு வரை இருக்கும். நூல் அதிகாரபூர்வமாக வெளியானதும் விலை 225க்குச் சென்றுவிடும். முன்பதிவு செய்வோர் நூலைப் பெற தனியே ஏதும்...

ஃபேஸ்புக்: ஓர் அறிவிப்பு

இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதினேன். இங்கே சேகரித்து வைக்கிறேன். அவ்வளவுதான். கடந்த மூன்று மாதங்களாக இங்கே நான் எழுதும் எந்த ஒரு குறிப்பும் ஐம்பது பேருக்கு மேலே சென்று சேராமல் இருந்தது. எப்போது நான் என்ன எழுதினாலும் – அது நட்ட நடு ராத்திரியாகவே இருந்தாலும் முதல் காரியமாக எழுந்து உட்கார்ந்து படித்து, லைக் போட்டுவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்கும் நண்பர்களுக்குக்...

பகுதியளவு ஜெயமோகன்கள்

டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது...

நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா

ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter