இந்த அத்தியாயம், கோவிந்தசாமி நிழலையும் செம்மொழிப்ரியாவையும் சுற்றியே நகர்கிறது. செம்மொழிப்ரியா காதல் வசனங்களைப் பேசிக் கோவிந்தசாமி நிழலை மயக்குகிறாள். நிழலும் அவளது காதல் வசனங்களுக்கு மயங்கிச் சாகரிகாவை பற்றியும் அவளது திட்டங்களைப் பற்றியும் உளறிக் கொட்டுகிறது. செம்மொழிப்ரியா நாசுக்காகப் பேசி, “இவ்வளவு நாள் கோவிந்தசாமிக்கு அடிமையாக இருந்தாய், இப்போது சாகரிகாவுக்கு அடிமையாக இருக்கிறாய், ஒரு...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 38)
அவள் ஏற்கனவே அந்த வீடியோவைப்பார்த்து கடுகடுப்பாய் இருக்கும்போது அவன் அங்கே வந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? அதுவும் அவளின் எதிரணியில் இருக்கும் நரகேசரியுடன் வந்தால்? அவள் அங்கிருக்கும் ஒரு கரடியின் முகத்தைக் கொண்டு தன் இருப்பை மறைத்து அங்கிருந்து வெளியேறுகிறாள். அந்த வீடியோவைப் பார்த்து அவன் கதறுகிறான். அதுவும் அந்த வீடியோவை அவள் பார்த்துவிட்டாள் என அறிந்ததும் இன்னும் பதற்றம் கூடுகிறது...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 37)
சாகரிகாவும் ஷில்பாவும் நீலவனத்தின் நூலக சமஸ்தானத்தை அடைந்தபோது, அதன் வாசலில் யாளி ஒன்று விழுந்து கிடந்தது பற்றியும் அதைப்பற்றிய சுவாரஸ்யமான விவரங்களுடன் அத்தியாயம் தொடங்குகிறது. அதுவரை யாளியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த நீலவனத்தினர் சாகரிகாவின் வருகையை அறிந்ததும் அவள் மீது தங்களது கவனத்தை திசைதிருப்புகின்றனர். அங்கே வெண் பலகையில் கோவிந்தசாமியின் சான்ட்விச் மசாஜ் சல்லாபக்காட்சிகள்...
சொற்களால் ஆனவன்
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைப் பணியில் இருந்து விலகி பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். தனியே ஒரு தொடரை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்த அவரிடம் அப்போது ஒரு கதை சொன்னேன். பிறகு பல...
உறங்காத அலை
இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான். நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 32)
முல்லைக்கொடி பிறந்து அதன் பின் பிறந்தும் தேசியவாதியாகத்தான் காணப்பட்டாள். முல்லைக்கொடி கோவிந்தசாமியை ஒயின்ஸ் அருகில் சந்திக்கிறாள். சாகரிகா தன்னைக் கடன்காரி ஆக்கியதால் சீரழிந்து விட்டதாகக் கூறுகிறான். இந்த முதல் சந்திப்பைக் குறித்து முல்லைக் கொடி எழுதியதை மின் வாகனத்தில் இருந்த வெண்பலகையின் வழியாகப் படித்து அதிர்ச்சியுற்றுக் கத்துகிறான். அதுல்யாவிற்கும் கோவிந்தசாமிக்கும் இடையே அன்புப் பற்றியும்...
fifine K 678 – ஒரு மதிப்புரை
இந்த மைக்கைப் பற்றி வெங்கட் எனக்குச் சொன்னார். ஒலிச் சுத்தம் நன்றாக இருப்பதையும் பயன்பாடு எளிதாக உள்ளதையும் அவரது அலுவலக அறையில் கண்டேன். நாளெல்லாம் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கும் இம்சையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இது நடந்ததால் உடனே அமேசானில் ஆணையிட்டு, இன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு காரணம், ஹெட்போனை மாட்டிக்கொள்ளும்போது கணித் திரையில் நமது மேனி...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 33)
சூனியனின் திட்டத்திற்கேற்ப, செம்மொழிப்பிரியா நிழலையும், அதுல்யா கோவிந்தசாமியையும் காதல் வசப்படுத்துவதென முடிவாகிறது. இதற்கிடையில், இரவு ராணி என்னும் மந்திர மலரைத் தேடி கோவிந்தசாமி நீல வனத்திற்கு வந்துவிட்டான். அந்த மந்திர மலரைக் கொண்டு சாகரிகாவை தன்வசமாக்க பார்க்கிறான் கோவிந்தசாமி. செம்மொழிப்பிரியாவும் நிழலைப் பார்க்கப் புறப்படுகிறாள்.செம்மொழிக்கு நிழலைக் கண்டுபிடிக்கச் சற்று கடினமாகத்தான்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 36)
தான் ஒரு சூனியன். தனக்கு மனம் என்ற ஒன்று இல்லை. அதனால்தான் சலனம் என்ற ஒன்று தனக்கு இல்லையென்றும் தன்னுடைய படைப்புகள் சலனமற்று தெளிவாக இருப்பதற்கும் அதுதான் காரணம் என்றும் சூனியன் கூறுவதாகத் தொடங்குகிறது அத்தியாயம். தன்னுடைய படைப்பில் இருக்கும் கலைநேர்த்தி கடவுளின் படைப்பில் இல்லை என்றும், கடவுளின் படைப்புகள் தங்களது படைப்பின் நோக்கம் இன்னதெனத் தெரியாமல், வாழத் தெரியாமல் அலைக்கழிவதைக் கண்டு...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 31)
கோவிந்தசாமிக்குச் சாகரிகாவின் மேல் உள்ள காதல் கொஞ்சமும் குறையவில்லை. கனவில் கூட அவளை விட்டு அவனுக்குப் பிரிய மனமில்லை.ஆனால் அவள் கனவில் கூட அவனை விட்டுப் பிரிகிறாள். நிஜயத்தில் நடத்திப் பார்க்க முடியாததைத்தான் கனவில் நிகழ்த்திப் பார்ப்போம். அது போல் கோவிந்தசாமியும் தன்னையும் தன் நிழலைப் பற்றியும் தனக்கு நேரும் நிகழ்வையும் கனவில் அவளிடம் கூறி ஆறுதல் அடைகிறான். கனவில் அவனை அளவுக்கு அதிகமாகவே...