இது என் பால்யம். எல்லாமே நடந்ததா என்றால், யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும் என்பதே என் பதில். இந்தக் கதையில் நான் இருக்கிறேன். நிறையவே இருக்கிறேன். என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றுவரை என்னோடு தொடர்பில் இருப்பவர்கள். எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசிக்கொள்ள இந்தக் கதை இன்னமும் எதையோ ஒன்றைப் புதிதாக எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது...
பூனைக்கதை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாவலை எழுதி முடித்தேன். பூனைக்கதை. உண்மையில் நான் எழுத நினைத்ததும் எழுதத் தொடங்கியதும் வேறொரு நாவல். ‘யதி’ என்று பெயர். ஆறேழு மாதங்களாக அதில்தான் மூழ்கியிருந்தேன். தற்செயலாக ஒரு நாள் உறக்கத்தில், கனவில் அந்த நாவலுக்குள் புகுந்த ஒரு பூனை கணப் பொழுதில் பூதாகார வடிவமெடுத்து என் கதாநாயகனை விழுங்கிவிடும்போல் இருந்தது. அந்தப் பூனையை முதலில் நாவலில் இருந்து இறக்கி...
அலை உறங்கும் கடல் – ஒரு கடிதம்
வணக்கம் பாரா சார். என் பெயர் ஆனந்த். என்னைப் பற்றிய பெரிய அறிமுகம் ஏதுமில்லை. தங்களை முகநூலில் தொடர்கிறேன். அலை உறங்கும் கடல் பற்றி நீங்கள் பதிவிட்டபோது நீலுப்பாட்டியை சந்திக்க ஆவல் கொண்டேன். ஆனால் வெகு விரைவில் மறந்தும் போனேன். கிண்டிலில் இன்று தமிழ்ப் புத்தகங்களைத் தேடிய போது, இந்தப் புத்தகம் வந்தது. உடனே வாங்கினேன். கடலுக்குள் மூழ்கிப்போக ஆரம்பித்தேன். செவியின் கூர்மையைப் பொறுத்த சங்கீதம் என்ற...
குற்றமும் மற்றதும்
குற்றவாளிகளைக் குறித்துப் பொதுவாக நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. ஒரு கிரிமினலை செய்தித்தாள் மூலம் அறிய நேர்ந்தால் ஒன்று, வெறுப்படைவோம். அல்லது, விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே உள்வாங்கி, படித்த மறுகணம் மறந்துவிடுவோம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரயில் பயணங்களிலும் அலுவலக இடைவேளைகளிலும் எப்போதாவது விவாதம் நடக்கும். குற்றம் செய்தது யாராவது அந்தஸ்துள்ள பெரிய மனிதர் எனக் கண்டால் ஒருவேளை...